டிஆர்பி முறைகேடு.. எனக்கும் அந்த டிபார்மென்ட்டுக்கும் தொடர்பில்லை.. அர்ணாப் விளக்கம்
மும்பை: தொலைக்காட்சி டிஆர்பி முறைகேடு வழக்கில் திடீர் திருப்பமாக, ரிபப்ளிக் டிவி சேனலில் எடுத்த அனைத்து முடிவுகளும் தனக்கு தெரிந்திருக்கவில்லை என்று அதன் ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்து ரிபப்ளிக் டிவி சேனல் முதல் இடத்தில் இருப்பது போல மாற்றியதாக அர்ணாப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக விசாரிக்கும் மும்பை காவல்துறை 68 கேள்விகளுக்கு பதில் அளிக்க கோரியது.
அர்ணாப் கோஸ்வாமி, மே 24 அன்று கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ரிபப்ளிக் ஊடக குழுமத்தில் 1,100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவதாகவும், இந்த வழக்கில் தொடர்புள்ள பிரச்சினைகள் தொடர்பான முடிவுகள் விநியோகக் குழுவால் நிர்வகிக்கப்படுபவை, ஆனால், தான் எடிட்டோரியல் தலைமை பொறுப்பில் இருப்பதாக விளக்கம் கூறியுள்ளார் அர்ணாப் கோஸ்வாமி.
மும்பை காவல்துறை, செவ்வாயன்று தாக்கல் செய்த 1,912 பக்க துணை குற்றப்பத்திரிகையில், ரிபப்ளிக் தொலைக்காட்சி ஊழியர்களின் வாட்ஸ்அப் உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்களை இணைத்துள்ளது.












Click it and Unblock the Notifications