‛ஓ ஷிட்'.. அஜித் பவார் பயணித்த விமானத்தின் விமானிகள் கடைசியாக சொன்ன வார்த்தை.. அதிர்ச்சி தகவல்
மும்பை: மகாராஷ்டிராவின் பாராமதியில் நேற்று நடந்த விமான விபத்தில் துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில் தான் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு கடைசியாக 'Oh s***' என்ற வார்த்தையை பயன்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், தேசியவாத கட்சியின் தலைவருமான அஜித் பவார் நேற்று விமான விபத்தில் பலியானார். அவருக்கு வயது 66. மும்பையில் இருந்து நேற்று காலையில் அஜித் பவார் பாராமதிக்கு சிறிய ரக தனி விமானத்தில் புறப்பட்டார். பாராமதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார், அவரது ஒரு பாதுகாவலர், ஒரு உதவியாளர், 2 பைலட்டுகளான சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகியோரும் பலியாகினர். பயணித்த 5 பேரும் விமான விபத்தில் உயிரிழந்தது நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது.
பைலட்டுகளின் அனுபவம்
இதில் பைலட் சுமித் கபூருக்கு 15,000 மணிநேரத்துக்கு மேல் விமானத்தில் பறந்த அனுபவம் உள்ளது. அதேவேளையில் துணை விமானி ஷாம்பவி பதக்கிற்கு 1,500 மணிநேரத்துக்கு மேல் பறந்த அனுபவம் இருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.
கடைசி வார்த்தை
இந்நிலையில் தான் விமான விபத்து குறித்து அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில்தான் பைலட்டுகளின் கடைசி வார்த்தை ‛'Oh s***' என்று பதிவாகி உள்ளது. இதனை டிஜிசிஏ எனும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வார்த்தையின் அர்த்தம் என்ன?
பொதுவாக இந்த வார்த்தை ஏதாவது ஒரு மோசமான செயல் நடக்கும்போது பயன்படுத்தப்படும். அந்தவ வகையில் தான் விமானம் விபத்தில் சிக்கும்போது விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.முன்னதாக இந்த விமான விபத்து பற்றி மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டது.
8.10 மணிக்கு கிளம்பிய விமானம்
அதில், ‛‛ விபத்தில் சிக்கிய விமானம் விஎஸ்ஆர் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் Learjet 45 ரக விமானமாகும். சம்பவம் குறித்து விமான விபத்து விசாரணை பணியகம் ( Aircraft Accident Investigation Bureau or AAIB) விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த விமானம் காலை 8:10 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து பாரமதி விமான நிலையத்துக்கு புறப்பட்டது.
பனிமூட்டம் இருந்தது
மும்பையில் இருந்து சரியாக 256 கிலோ மீட்டர் தூரத்தில் பாராமதி உள்ளது. விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 45 நிமிடங்கள் வரை ஆகும். பாராமதி பகுதியில் பனிமூட்டம் நிலவியது. இதுபற்றி விமானத்தை இயக்கிய பெண் பைலட் ஷாம்பவி பதாக்கிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது பைலட், எந்த அளவு பனிமூட்டம் மற்றும் பார்க்கும் திறன் இருக்கிறது என்று கட்டுப்பாட்டு அதிகாரியிடம் கேட்டார். கட்டுப்பாட்டு மைய அதிகாரி சுமார் 3000 மீட்டர் (3 கிலோ மீட்டர்) தூரத்துக்கு பார்க்கலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.
‛கோ அரவுண்ட்’ ஆர்டர்
3 கிலோ மீட்டர் பார்வை தெளிவு என்பது இதுபோன்ற சிறிய ரக விமானத்தை தரையிறக்க போதுமானது தான். இதனால் விமானத்தை தரையிறக்க அனுமதி கிடைத்தது. இதையடுத்து பைலட் பாராமதி விமான நிலையத்தில் ரன்வே நம்பர் 11ல் விமானத்தை தரையிறக்க முயன்றார்.
ஆனால் எதிர்பார்த்ததை விட பனிமூட்டம் அதிகமாக இருந்தது. ரன்வே தெளிவாக தெரியவில்லை. இதனால் தரையிறக்கும் நோக்கத்தில் விமானத்தின் உயரத்தை குறைத்த பைலட்டுக்கு ரன்வே-வை சரியாக பார்க்க முடியவில்லை.
நொறுங்கி தீப்பிடித்த விமானம்
இதனால் பைலட் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு ரன்வே சரியாக தெரியவில்லை என்று கூறினார். உடனே ‛Go Around' முறையில் விமானத்தை இயக்க பைலட்டுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி மீண்டும் விமானம் வானில் பறந்தது. அதன்பிறகு மீண்டும் விமானம் மீண்டும் தரையிறங்க தயாரானது.
ரன்வே கிளியராக தெரிவதாக பைலட் கூறினார். இதையடுத்து தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பைலட்டிடம் இருந்து எந்த ரீப்ளையும் வரவில்லை. இதற்கிடையே தான் அந்த விமானம் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து 5 பேரும் பலியாகினர்'' என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications