புலம்பெயர் தொழிலாளி கொலை, முதியவர் தாக்குதல்.. பதறவைக்கும் மாட்டுக்கறி வன்முறை
மும்பை: இந்தியாவில் உணவு அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் உணவு அவரவர் விருப்பம், அவரவர் உரிமை. என்று கருத்து நிலவுகிறது. மறுபக்கம் அவரவர் விருப்ப உணவுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் பயணத்தின்போது, மாட்டுக்கறி எடுத்து வந்ததாக சந்தேகத்தில் முதியவரை சக பயணிகள் மூர்க்கத்தனமாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் ஒரு முதியவர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். திடீரென அந்த முதியவரை 10க்கும் மேற்பட்ட பயணிகள் இணைந்து கடுமையாக தாக்க தொடங்கினார்கள். அசிங்கமாக திட்டியபடியே அவர்கள் முதியவரை தாக்கினார்கள். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாக பரவியது. அந்த வீடியோ காண்போருக்கு அதிர்ச்சியையும், பதற்றத்தையும் வரவழைக்கும். இதையடுத்து ரயில்வே காவல்துறை இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அதில் ரயிலில் தாக்கப்பட்டவரின் பெயர் ஹாஜி அஸ்ரப் முனியர் என்பதும் வயது 72 என்பதும் தெரியவந்துள்ளது. அவர் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்யாண் பகுதியில் உள்ள தன் மகளின் வீட்டுக்கு செல்வதற்காக ரயிலில் பயணித்துள்ளார். ரயில் இகத்புரி அருகே செல்லும்போது, முதியவர் மாட்டுக்கறி எடுத்து செல்கிறார் என்ற சந்தேகத்தில் சக பயணிகள் அவரை தாக்கியுள்ளனர். முதியவரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து ரயில்வே காவல்துறை கூறுகையில், "இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரம் ஆகியுள்ளது. பாதிக்கப்பட்டவரை கண்டறிந்துள்ளோம். அவர் கூறிய தகவலின் அடிப்படையில், முதியவர்களை தாக்கியவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகிறோம். உண்மையில் அவர் மாட்டுக்கறி எடுத்து செல்லவில்லை. அவர் எருமை கறியை தான் எடுத்து சென்றுள்ளார். அது தடை செய்யப்படவில்லை. ஏற்கனவே ரயிலில் அந்த முதியவரிடம் சீட்டுக்காக சண்டை போட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தான், அவர் மாட்டுக்கறி வைத்துள்ளார் என்று சொல்லி அடித்து, உதைத்து, அசிங்கமாக திட்டியுள்ளனர். இதை அவர்களே வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த கும்பல் முதியவரை கல்யாண் ரயில் நிலையத்தில் இறங்கவும் விடவில்லை.
பிறகு அவர் தானே ரயில்நிலையத்தில் இறங்கி மகளின் வீட்டுக்கு சென்றுள்ளார். முதியவர் இதுதொடர்பாக முதலில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. நாங்கள்தான் அவரிடம் பேசி புரிய வைத்து புகாரளிக்க வைத்தோம். அதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்துள்ளோம். இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் தான். இவர்கள் தூலே பகுதியைச் சேர்ந்தவர்கள். மும்பை - தானே ரயிலில் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துகொள்ள சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல ஹரியானாவில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரை மாட்டுக்கறி சாப்பிட்டதாக எழுந்த சந்தேகத்தில், பசுப் பாதுகாப்பு குழுவினர் தாக்கி கொலை செய்த அதிர்ச்சியும் நடந்துள்ளது.
உயிரிழந்தவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீர் மாலிக் என்பது தெரியவந்தது. அவரை பசுப் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த அபிஷேக், மோஹித், ரவீந்தர், கமல்ஜித், சாஹில் ஆகிய பேர் தாக்கி கொலை செய்துள்ளனர். அவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு ஹரியானா முதலமைச்சர் நாயப் சிங் சயானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications