பழம்பெரும் நடிகர் திலீப் குமார் காலமானார்... நாடு போற்றிய நல்ல கலைஞரை இழந்த பாலிவுட் திரையுலகம்..!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 98.
பாலிவுட் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் திலீப் குமார். 1944-ம் ஆண்டு நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர் 1998-ம் ஆண்டு வரை நடித்தார்.
1994-ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற திலீப் குமார், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், என அனைத்து உயர்ந்த விருதுகளையும் பெற்றிருக்கிறார். இதேபோல் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

இதனிடையே வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் திலீப் குமார். கடந்த மாதம் அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் காலமானார்.. திரை பிரபலங்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த போதும், வயது மூப்பின் காரணமாக மருத்துவத்தை அவரது உடல்நிலை ஏற்கும் நிலையில் இல்லை. இருப்பினும் தொடர் சிகிச்சை தரப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில் இன்று அதிகாலை திலீப் குமாரின் உயிர் மும்பை இந்துஜா மருத்துவமனையில் பிரிந்தது. இதையடுத்து திலீப் குமாரின் நினைவை போற்றும் வகையில் அவர் நடித்த திரைப்படக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் திலீப்குமாரை இழந்து வருந்தும் அவரது மனைவி சாய்ரா பானு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்திய திரையுலக நட்சத்திரங்கள் ஆறுதலும், இரங்கலும் பதிவிட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications