B.1.1529.. பீதியை கிளப்பும் ஆபத்தான வைரஸ்.. மும்பை மேயர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
புது வைரஸ் பரவுவதையடுத்து மும்பை மேயர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
மும்பை: தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பும் ஒவ்வொரு நபரும் மும்பை வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்கு அனுப்பப்படும் என்று மும்பை மேயர் அறிவித்துள்ளார்.
இந்த 2 வருடங்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம் உலக மக்களை வெலவெலத்து வைத்து வருகிறது.. சில மாதங்களுக்கு முன்புவரை டெல்டா, டெல்டா பிளஸ் என்று இந்த கொரோனா புது புது உருவெடுத்து வந்து மிரட்டியது..
இப்போது இன்னொரு வகை வந்துள்ளது.. தென்னாப்பிரிக்காவில் பி 1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது...

அதி தீவிரம்
இது ரொம்பவும் ஆபத்தான வைரஸாம்.. இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களிலே, இதுதான் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதி வேகமாக பரவும் இந்த புதிய வைரஸ் 10 பிறழ்வுகளை கொண்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.. இதனால் உலக நாடுகள் உஷார் ஆகி உள்ளன..

சுகாதாரத்துறை
அந்த வகையில், இந்திய ஏர்போர்ட்களிலும் கண்காணிப்பை மறுபடியும் தீவிரப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.. அதன்படி, மீண்டும் ஏர்போர்ட்களில் கொரோனா டெஸ்ட் மற்றும் ஸ்கிரினிங் டெஸ்ட் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்..

மாதிரிகள்
அதன்படி, தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பும் ஒவ்வொரு நபரும் மும்பை வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைமுறைக்கு அனுப்பப்படும் என்றும், அவர்களின் சோதனை முடிவுக்கு பிறகே சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த 2 வருடமாகவே சுற்றுலா தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.. விமான போக்குவரத்தும் அவ்வளவாக செயல்படாத சூழல் இருந்து வருகிறது..
Recommended Video

பயணிகள்
இந்தியாவில் ஓரளவு தொற்று கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து, வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானசேவை தொடங்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை நேற்றுதான் அறிவித்திருந்தது.. வெளிநாடுகளை 3 வகையாக பிரித்து அதற்கேற்ப கட்டுப்பாடு விதிக்கப்பட்டு விமானங்களை இயக்கவும் முடிவு செய்திருந்தது.. ஆனால் அதற்குள் இப்படி வைரஸ் பூதாகரமாக கிளம்பி, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications