அவுரங்கசிப் பேனர்களுடன் நடனம்.. களத்தில் குதித்த இந்து அமைப்பினர்.. பதற்றத்தில் மகாராஷ்டிரா!
மும்பை: மகாராஷ்ட்ராவில் முகலாய மன்னன் அவுரங்கசிப் பேனர்களுடன் சில இளைஞர்கள் நடனமாடிய சம்பவம் அங்கு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட மதத்தினரின் பேரணியின் போது இந்த சம்பவம் நடைபெற்றதை கண்டிக்கும் வகையில், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிவாஜி vs அவுரங்கசீப்
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, சில குறிப்பிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களையும், மன்னர்களையும் தங்களின் அடையாளமாக அக்கட்சியினர் காண்பித்து வருகின்றனர். உதாரணமாக, சுதந்திரப் போராட்டம் என எடுத்துக்கொண்டால் சாவர்க்கரையும், சந்திரசேகர ஆசாத்தையும் பாஜக கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அதேபோல, மன்னர்களில் சத்ரபதி சிவாஜியை ஆதர்சன நாயகனாக பாஜக போற்றி வருகிறது. அதே சமயத்தில், முகலாய மன்னர் அவுரங்கசிப், திப்பு சுல்தான் ஆகியோருக்கு எதிராகவும் பாஜக பேசி வருகிறது. இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திப்பு சுல்தானை தங்கள் அடையாளமாக காட்ட முற்படுகின்றன. இது, சில சமயங்களில் மதரீதியான மோதலுக்கும் வழிவகுத்து விடுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

மத ஊர்வலம்
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள மங்ரூல்பீர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கடந்த 14-ம் தேதி இரவு ஊர்வலம் நடத்தினர். அப்போது, ஊர்வலத்தில் கலந்துகொண்ட சில இளைஞர்கள் முகலாய மன்னர் அவுரங்கசீப், திப்பு சுல்தான் ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பேனர்களை ஏந்திக்கொண்டு நடனமாடியபடி சென்றனர். மேலும், அந்த மன்னர்களை புகழும்படியான பாடல்களும் இசைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கொதித்தெழுந்த இந்து அமைப்பினர்
இதனிடையே, அவுரங்கசீப் பேனர்களுடன் இளைஞர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிம் மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவுரங்கசீப், திப்பு சுல்தான் புகைப்படங்களுடன் நடனமாடியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் மகாராஷ்ட்ராவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் எழுந்துள்ளது.

8 பேர் மீது வழக்கு பதிவு
இதன் தொடர்ச்சியாக, அவுரங்கசீப் பேனர்களை ஏந்தி வந்த 8 பேர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதால் போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவத்தை முன்வைத்து பல இடங்களில் இரு மதங்களைச் சேர்ந்தவர்கள் இடையே மோதல் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதங்களைத தடுக்க ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications