ராஜ் குந்த்ராவின் போனில் 119 ஆபாச வீடியோக்கள்.. 9 கோடிக்கு டீல் பேசி விற்க திட்டம்.. அதிர்ந்த போலீஸ்
மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் செல்போனில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததை மும்பை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும் விசாரணையில் அந்த வீடியோக்கள் 9 கோடி ரூபாய்க்கு விற்கவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோக்களை தயாரித்து அவற்றை சில செயலிகள் மூலம் வெளியிட்டு அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஜூலை மாதம் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரது கூட்டாளியான ரியான் தோர்பேவும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜ்குந்த்ரா முக்கிய குற்றவாளி என்றும் அதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாகவும் மும்பை போலீஸார் தெரிவித்தனர்.

ராஜ் குந்த்ரா
ஷில்பா ஷெட்டியின் வீட்டிலும் ராஜ் குந்த்ராவை அழைத்து சென்று மும்பை போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் தனது நற்பெயருக்கு குந்த்ரா களங்கம் ஏற்படுத்தியதாக ஷில்பா கோபத்துடன் தெரிவித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

ராஜ் குந்த்ரா
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராஜ் குந்த்ரா, ரியான் ஆகியோருக்கு எதிராக 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஷில்பா உள்பட 43 சாட்சிகளின் அறிக்கைகள் உள்ளன. நடிகர்கள் ஷெர்லின் சோப்ரா, செஜல் ஷா, உள்ளிட்ட மாடல்கள், குந்த்ரா நிறுவன ஊழியர்கள் ஆகியோரின் அறிக்கைகளும் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன்
இந்த நிலையில் ராஜ்குந்த்ராவுக்கு நேற்றைய தினம் ஜாமீன் கிடைத்தது. குந்த்ராவுக்கு 50 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை விதிக்கப்பட்டு அதை செலுத்தியதும் அவருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சில நிமிடங்களில் நடிகை ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீன- அமெரிக்க கலைஞர் ரோஜர் லீயின் மேற்கோளை காட்டி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அழகிய வானவில்
அவர் தனது ட்வீட்டில் கூறுகையில் ஒரு பயங்கர புயலுக்குப் பிறகு அழகான விஷயங்கள் நடக்கலாம் என்பதை நிரூபிக்கவே வானவில் வருகிறது. முன்னதாக குந்த்ராவின் மொபைல் போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு மும்பை போலீஸார் அதிர்ச்சி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த வீடியோக்களை அவர் ரூ. 9 கோடிக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications