மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பரபர.. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் அதிகரிப்பு! குஷியில் பாஜக
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் களம் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து இருக்கும் நிலையில் பாஜக - காங்கிரஸ் என இரு கூட்டணிகளிலுமே மோதல் இருக்கிறது. குறிப்பாக மகா விகாஸ் அகாடி கூட்டணியில் குழப்பம் உச்சகட்டத்தில் இருக்கிறது. பல தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பலர் களம் இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக - சிவசேனா ( ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் ( அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்திற்கு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில், நவம்பர் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தற்போது பாஜக, சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அஜித் பவர் என்சிபி, உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தற்போது பாஜகவின் கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு முடிவடைந்திருக்கும் நிலையில் பாஜக 156 தொகுதிகளிலும், ஷிண்டே சிவசேனா 78 தொகுதிகளிலும், அஜித் பவார் என்சிபி 54 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இதே போல காங்கிரஸ் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ், கூட்டணி கட்சிகளும் தேர்தலில் பாஜக கூட்டணியை எதிர்த்து களம் இறங்குகின்றன. அந்த கூட்டணியின் தொகுதி பங்கீடும் இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 85 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ், கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன. அந்த கூட்டணியில் ஓரளவு சுமூகமாக தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது. ஆனால் உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத் பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பெரிய அளவில் பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் சில தொகுதிகளில் மகா விகாஸ் அகாடி கூட்டணியினர் இஷ்டத்துக்கு வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நவம்பர் 6ஆம் தேதி உத்தவ் தாக்கரே, சரத் பவர், ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தை துவக்க இருக்கின்றனர்.
தற்போது ஒரு சில தொகுதிகளில் குழப்பம் நிலவுவது உண்மைதான் எனவும், 10 முதல் 12 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர். ஆனால் அது தொடர்பான விவகாரங்கள் எனக்கு தெரியாது எனக் கூறியிருக்கிறார் சரத் பவர். கூட்டணி கட்சி தலைவர்கள் அமர்ந்து பேசி இன்னும் இரண்டு மூன்று நாட்களை குழப்பத்திற்கு தீர்வு காணப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்தியா கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆன ராஜா, மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு தொடர்பாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசி உள்ள அவர் பாஜகவை கேள்வி கேட்கும் காங்கிரஸ் முதலில் தங்களிடமே அந்த கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் எப்படி தேர்தல் வியூகங்களை வகுக்குறார்கள். தொகுதி பங்கிட்டு எந்த அடிப்படையில் இறுதி செய்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கூறியிருக்கிறார். இதனால் மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் மகா விகாஸ் அகாடி - இந்தியா கூட்டணியில் முரண்பாடுகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. இது பாஜகவுக்கு சாதகமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications