பவாருடன் லன்ச்.. ஷாருக்குடன் போன்.. "மிஷன் 2024" காய் நகர்த்துகிறாரா பிரசாந்த் கிஷோர்.. என்ன பின்னணி
மும்பை: அரசியல் ஆலோசகர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிரசாந்த் கிஷோர் இன்று திடீரென மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் உடன் சந்திப்பு நடத்தினார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ஐபேக் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பங்கு மிக முக்கியமானது. தமிழ்நாட்டிலும் திமுகவிற்கு, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் திட்டங்களை வகுத்து கொடுத்ததில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்தார்.
இரண்டு மாநிலங்களிலும் இவர் வேலை பார்த்த திமுக, திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், திடீரென அரசியல் ஆலோசகர் பொறுப்பில் இருந்தே விலகுவதாக அறிவித்தார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ரிட்டயர்மெண்ட்டை அறிவித்தார்.

குழப்பம்
ஆனால் அப்போதே பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசனையைதான் நிறுத்த போகிறார். அவருக்கு வேறு திட்டம் உள்ளது. அவர் அரசியலில் குதிக்க போகிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டன. முக்கியமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று பேச்சுக்கள் அடிப்பட்டன. மம்தா பானர்ஜி தேசிய அரசியலுக்கு அடிப்போடும் நிலையில் அதில் பிரசாந்த் கிஷோர் "பேக்டர்" முக்கியத்துவம் பெறுகிறது.

எப்படி?
இந்த நிலையில்தான் இன்று திடீரென பிரசாந்த் கிஷோர் மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் உடன் சந்திப்பு நடத்தினார். ஷரத் பவாரின் கூட்டணியில் உள்ள சிவசேனாதான் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் பிகே அங்கு விசிட் அடித்து, பவாருடன் மதிய உணவு சாப்பிட்டது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

எதிர்க்கட்சி
2024 லோக்சபா தேர்தலுக்கு எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையா இது என்று கேள்வி எழுந்துள்ளது. மம்தாவை தலைமையாக கொண்டு, எதிர்கட்சிகளை ஒரு குடைக்கு கீழ் கொண்டு வர பிரசாந்த் கிஷோர் முயல்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. 2024ல் நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.. இப்போது முதலில் கொரோனாவை வீழ்த்த வேண்டும் என்று ஏற்கனவே வெளிப்படையாக் பிரசாந்த் கிஷோர் பேசி இருக்கிறார்.

சந்தேகம்
இதனால் பவாருடன் இன்று அவர் நடத்திய மீட்டிங் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதே சமயம் மம்தா பானர்ஜிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் ஷரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த ஆதரவுக்கு நன்றி சொல்லும் விதமாக பிகே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இன்னும் பல எதிர்கட்சித் தலைவர்களை பிரசாந்த் கிஷோர் சந்திப்பார் என்றும் கூறுகிறார்கள்.

ஷாருக்கான்
அதோடு இன்று ஷாருக்கானுக்கு போன் செய்து பிரசாந்த் கிஷோர் பேசி உள்ளார். இதையடுத்து பிரசாந்த் கிஷோரின் வாழ்க்கை வரலாற்றை ஷாருக்கான் படமாக்க போகிறார், ஷாருக் அரசியலுக்கு வருகிறார் என்றெல்லாம் இது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால் பிரசாந்த் கிஷோர் - ஷாருக்கான் உரையாடல் நட்பு ரீதியாக நடந்தது, வேறு பின்னணி எதுவும் இல்லை என்றும் கூறுகிறார்கள்.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications