ஒரு முறை மூக்குக்குள் குச்சியால குடையறதே பிடிக்கலையே.. 20 முறை கொரோனா டெஸ்ட் எடுத்த ப்ரீத்தி ஜிந்தா!
மும்பை: நடிகையும் பஞ்சாப் ஐபிஎல் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தாவுக்கு 20ஆவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
13ஆவது ஐபிஎல் போட்டிகள் அபுதாபியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் படுதோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி அண்மைகாலமாக சில வெற்றிகளையும் குவித்துள்ளது.
இதையடுத்து ஒட்டுமொத்த புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது. இந்த அணியின் நிர்வாகியான ப்ரீத்தி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு வருகை தந்து, தங்கள் அணியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

கொரோனா பரிசோதனை
இந்த நிலையில் அவர் 20ஆவது முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதனால் அவர் கொரோனா டெஸ்ட் குயின் என அழைக்கப்படுகிறார். மேலும் துபாயில் கொரோனா தனிமைப்படுத்தல் குறித்த அனுபவங்கலை நெட்டிசன்களுடன் பகிர்ந்து கொண்டார்.

6 நாட்கள்
அப்போது அவர் கூறுகையில் பலரும் என்னிடம் ஐபிஎல் அணிகளுக்கு எப்படி கொரோனா பாதுகாப்பு வழங்கப்படுகிறது என கேட்டிருந்தனர். அத்துடன் என்னுடைய அனுபவத்தையும் கேட்டிருந்தனர். நான் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

உடற்பயிற்சிக் கூடம்
ஒவ்வொரு 3 முதல் 4 நாட்களுக்கும் இங்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அறையில் இருந்து வெளியே செல்லக் கூடாது. எங்கள் அணிக்கு என கொடுக்கப்பட்டிருக்கும் உணவகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுதந்திரப் பறவை
எந்த உணவும் வெளியிலிருந்து கொண்டு வரக்கூடாது. வெளியாட்கள் யாருசடனும் பழகக் கூடாது. என்னை போன்று சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புவோருக்கு இது கடினமானதாகும். இருந்தாலும் கொரோனாவிற்கு இடையிலும் ஐபிஎல் நடத்தப்படுகிறது என்பதற்காக பிசிசிஐ மற்றும் மருத்துவக் குழுவினருக்கு நன்றி என்றார் ப்ரீத்தி ஜிந்தா.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications