கோவிலில் மாப் போட்டு தூய்மை பணி செய்த மோடி.. நாட்டு மக்களுக்கு வைத்த விசேஷ கோரிக்கை! என்னனு பாருங்க
மும்பை: பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மகாராஷ்டிரா மாநிலம் வருகை தந்த பிரதமர் மோடி, நாசிக்கில் உள்ள ஒரு கோவிலில், தானே மாப் போட்டு தூய்மை பணி செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பிரதமர் மோடி இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் சென்றார். நாட்டிலேயே மிக நீண்ட கடல் பாலமான அடல் சேது பாலம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்றார். தனி விமானம் மூலம் மும்பை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் நாசிக் சென்றார் பிரதமர் மோடி.

நாசிக்கில் பிரதமர் மோடி தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைத்தார். நாசிக்கில் உள்ள கல்ராம் கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, சந்த் ஏக்நாத் மராத்தி மொழியில் எழுதிய 'பவர்த்த ராமாயணம்' வசனத்தையும் கேட்டார். கோதாவரி நதிக்கரையோரம் அமைந்துள்ள அந்த நதிக்கரையில் பிரதமர் மோடி, தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.
ஒரு வாளியில் தண்ணீரை தானே தூக்கிக் கொண்டு வந்து வைத்து மாப்பை வைத்து சுத்தம் செய்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பின்னர் நாசிக்கில் உள்ள தபோவம் மைதானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டு மக்கள் கோவில்களில் தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,கோவில்களில் தூய்மை பணியை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி வழிபாடு நடத்திய கல்ராம் கோவில் 1,700 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. முகாலயர்களால் இந்த கோவில் அழிக்கப்பட்டது. கடவுள் ராமர் வெறும் 1.5 நிமிடங்க்ஜளில் 14 ஆயிரம் தீய சக்திகளை அழித்ததாகவும் அதன் காரணமாகவே கல்ராம் என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. Kaal (கல் என்றால் மரணம்) தீய சக்திகளுக்கு மரணம் என்பதை குறிக்கும் விதிக்கும் இந்த கல்ராம் கோவில் அமைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது
பிரதமர் மோடியுடன் இந்த கோவிலுக்கு ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோரும் சென்றனர். கோவிலில் வழிபாடு நடத்திய பிறகு பிரதமர் மோடி, அடல் சேது பாலத்தை திறந்து வைத்தார். ரூ.17,840 கோடியில் கட்டப்பட்ட இந்த பாலம் இந்தியாவிலேயே மிக நீண்ட கடல் வழி பாலம் ஆகும். அதன்பிறகு நவி மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.












Click it and Unblock the Notifications