வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்! என்ன நடந்தது?
மும்பை: மும்பை அருகே வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மும்பை - சோலாப்பூர் வந்தே பாரத் ரயில் புனே ரயில் நிலையம் அருகே சென்றபோது 4-வது பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகி கீழே இறங்கியது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். எனினும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தடம் புரண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து சோலாப்பூருக்கு சென்ற ரயில் புனே ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் நம்பர் 7 க்குள் நுழையும் போது தடம் புரண்டது. டைமண்ட் கிராசிங்கில் ரயில் நுழையும் போது பெட்டிகள் தடம் புரண்டன. முக்கோண வடிவம் கொண்ட கிராசிங்கில் ரயில் டிராக் மாறும் போது தடம் புரண்டது.

உடனடியாக பயணிகளை வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர். தடம் புரண்ட ரயில் பெட்டியை நிலைநிறுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நிகழ்விடத்தில் ஏராளமான பயணிகளும் கூடியதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக சேவையில் இருந்து வரும் நிலையில், வந்தே பாரத் விபத்தில் சிக்குவது இதுவே முதல் முறையாகும்.
நாட்டில் சொகுசு ரயிலாக கடந்த 2019 ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சொகுசு, அதிவேகம் ஆகியவை காரணமாக இந்த ரயில்களுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் கொண்டதாக அறியப்படும் வந்தே பாரத் ரயில், இன்று மும்பை அருகே தடம் புரண்டது. மும்பை - சோலாபூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், புனே ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது தடம் புரண்டது. ரயில் மெதுவாக இயக்கப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாற்று ரயிலில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications