Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிராவில் வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவு! தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி கேள்வி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019 சட்டசபை தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இடையேயான காலகட்டத்தில் 32 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கும் 2024 சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையேயான காலகட்டத்தில் 39 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டதாகவும், அந்த தேர்தலில் மொத்த வாக்காளர்களை விட சுமார் ஒன்பது லட்சம் வாக்குகள் அதிகமாக பதிவாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பி உள்ளார்.

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா யுதி கூட்டணி ஆட்சி நடைபெற்றகிறது. இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் உள்ள 288 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

rahul gandhi election commission congress

இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஏத்நாத் ஷிண்டே சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டன.

காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவர் பிரிவு 86 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கின. இந்த தேர்தலில் பிரதான கட்சிகள் தவிர, அதிருப்தி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என சுமார் 4000 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 20ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 6:00 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த தேர்தலில் 9.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் சுமார் 66 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த தேர்தலில் காங்கிரஸ், சரத் பாவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

மேலும் சட்டமன்ற தேர்தலுடன் ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற்ற நிலையில் அங்கு காங்கிரஸ் கூட்டணி வென்றது. ஆனால் அந்த தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வென்றது அப்போதே பலத்த விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருக்கலாம் எனவும், அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு அதிக வாக்குகள் பதிவானதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி.

சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சூலே ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்த அவர்," 2019 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இடையே 5 ஆண்டு காலத்தில் வெறும் 32 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். ஆனால் 2024 மக்களவைத் தேர்தல், 2024 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றுக்கு இடையேயான வெறும் ஐந்து மாத காலத்தில் 39 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் யார்? என்பது தான் எங்கள் கேள்வி. இது இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகைக்கு இணையானது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9.54 கோடி. ஆனால் அதைவிட அதிகமாக சுமார் ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் மொத்த வாக்காளர்களை விட அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தது எப்படி என்பது தான் தேர்தல் ஆணையத்தை நோக்கி நான் வைக்கும் கேள்வி" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+