"தப்பு செய்துவிட்டேன்.. ராகுல் பேச்சு என்னை உலுக்கிவிட்டது.." எமோஷ்னலான காங்கிரஸ் நிர்வாகி! உருக்கம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சியில் பெண் உரிமை குறித்தும் பெண்களை ஆண்கள் எப்படி மதிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ராகுல் காந்தி பேசினார். ராகுலின் இந்த பேச்சு தன்னை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவதாகவும் தன்னை யோசிக்க வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அவரது இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பெண்கள் எதிர்கொள்ளும் சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆணாதிக்கம் குறித்து பேசிய உரை, காங்கிரஸ் நிர்வாகி சுபோத் குமார் பாண்டேவை ஆழமாகப் பாதித்துள்ளது. ராகுல் காந்தியின் பேச்சை பலமுறை பார்த்ததாகக் கூறிய அவர், பெண்களிடம் தான் செய்திருக்க வேண்டிய அளவுக்கு மரியாதை, ஆதரவு மற்றும் புரிதலை வழங்கவில்லை என்பதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi India Congress

ராகுல் காந்தி நிகழ்ச்சி

அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, பெண்கள் தங்களுக்கென தனித்த கனவுகள், அடையாளங்கள் மற்றும் எதிர்கால பாதைகளை கொண்டவர்கள் என குறிப்பிட்டார். பெண்களை மகள், மனைவி, தாய் என்ற மூன்று அடையாளங்களுக்குள் மட்டுமே சமூகம் அடைத்து வைக்கக் கூடாது என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, அவர்கள் யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல என்றும் தங்களுக்கே சொந்தமானவர்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பெண்களை கட்டுப்படுத்தும் சமூக அமைப்பில் வன்முறை, அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் ராகுல் காந்தி கூறினார். ஆண்களும், இந்த சமூக கட்டமைப்பும் பெண்களை ஒவ்வொரு துறையிலும் அவர்களை கட்டுப்படுத்த முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் ராகுல் காந்தியின் பேச்சை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கிடையே ராகுல் காந்தியின் பேச்சு தன்னை சிந்திக்க வைத்தாக காங்கிரஸ் நிர்வாகி சுபோத் குமார் பாண்டே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தரவில்லை என்றும் இது தன்னை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவதாகவும் சுபோத் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி சுபோத் குமார் பாண்டே தனது எக்ஸ் பக்கத்தில் மேலும், "நேற்று முதல் இந்த முழு நிகழ்ச்சியையும் ஐந்து முறைக்கு மேல் பார்த்துள்ளேன். மீண்டும் மீண்டும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. ராகுலின் பேச்சு என்னை சற்று நேரம் நிறுத்தி, சிந்திக்க வைத்து, நான் இதுவரை உணராமல் இருந்த சில விஷயங்கள் பற்றி யோசிக்க வைத்துள்ளது.

உணர்ந்துவிட்டேன்

ஒரு மகனாக, சகோதரனாக, நண்பராக, வகுப்பு தோழனாக, கணவனாக, சமூகத்தின் ஓர் உறுப்பினராக, என்னை சுற்றியிருந்த பெண்களுக்கு அவர்கள் தகுதியான இடம், மரியாதை, கண்ணியம், ஆதரவு மற்றும் புரிதலை நான் எப்போதும் வழங்கவில்லை என்பதை உணர்ந்துள்ளேன். அவர்கள் என்னிடமிருந்து பெற்றதைவிடவும், நான் அவர்களுக்கு வழங்கியதைவிடவும் அதிகம் பெற தகுதியானவர்கள். அவர்கள் அனைத்திற்கும் தகுதியானவர்கள் தான்.

ஒருவேளை நான் உணர்வது குற்ற உணர்வாக இருக்கலாம். ஆனால், இதை உணர எனக்கு வெகு காலம் ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் பார்த்தது, சிறு வயது முதல் எனது வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. நான் அவர்களிடம் (பெண்கள்) கேட்க வேண்டிய நேரங்களில் கேட்கவில்லை, புரிந்துகொள்ள வேண்டிய நேரங்களில் புரிந்துகொள்ளவில்லை, அவர்களுக்கு நான் துணையாக நிற்க வேண்டிய நேரங்களில் நிற்கவில்லை என்பதை உணர வைத்தது.

துணையாக நிற்கவில்லை

நான் நிற்க வேண்டிய பல தருணங்களில் அவர்களுக்காக நிற்கவில்லை. இதுபோன்ற ஒவ்வொரு தருணத்திற்காகவும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உண்மையான மரியாதையை நாம் பேச்சளவில் வழங்குவது மட்டமில்லை. அது நமது செயல்கள், புரிதல் மற்றும் துணையாக நிற்கும் மனநிலை ஆகியவற்றின் மூலம் வெளிப்பட வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+