ஓடும் ரயிலில் ஏறி தவறி விழுந்த பயணி...கன நேரத்தில் காப்பாற்றிய ரயில்வே படை வீரர்கள்!!
மும்பை: மும்பை புறநகரில் இருக்கும் கல்யாண் ரயில் நிலையத்தில் நேற்று ரயிலுக்குள் தவறி விழவிருந்த பயணி ஒருவரை அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் காப்பாற்றி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகரில் உள்ளது கல்யாண் ரயில் நிலையம். எப்போதும் நெருக்கடி மிகுந்து காணப்படும். வெளிமாநிலங்களில் குறிப்பாக தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் இருந்து செல்லும் ரயில்களும் இந்த மார்க்கத்தில்தான் செல்ல வேண்டும்.

இங்கு நேற்று ரயில்வே பாதுகாப்புப் படையச் சேர்ந்த வீரர்கள் கே. சாகு மற்றும் சோம்நாத் மகாஜன் இருவரும் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். அப்போது அங்கு பயணிகள் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓடும் ரயிலில் 52 வயது பயணி ஒருவர் ஏறுவதற்கு முயற்சித்தார். தடுமாறி ரயிலுக்கும், பிளாட்பாரம் இடையே விழச் சென்றார். அப்போது அங்கு இருந்த ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த சாகு மற்றும் சோம்நாத் மகாஜன் இருவரும் பாய்ந்து சென்று அவரை காப்பாற்றினர். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.

இதையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பயணியை கன நேரத்தில் சுதாரித்து காப்பாற்றிய சாகு, சோம்நாத் மகாஜன் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
#WATCH On duty Railway Protection Force personnel K Sahu and Maharashtra Security Force personnel Somnath Mahajan at Kalyan railway station saved the life of a 52-year old passenger, who slipped between the platform and track as he de-boarded from a moving a train yesterday. pic.twitter.com/rmd0OuMzEy
— ANI (@ANI) July 29, 2020
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications