"தமிழர்களை பாருங்கள்.. இந்தியை உறுதியாக எதிர்க்கிறார்கள்.." தமிழகத்தை பாராட்டிய ராஜ் தாக்கரே
மும்பை: மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, மும்பையில் இருக்கும் அனைவரும் மராத்தி பேச வேண்டும் என தெரிவித்தார். மொழி விவகாரத்தில் தமிழகம் உறுதியாக இந்தியை வேண்டாம் எனச் சொல்வதாகக் குறிப்பிட்ட அவர், வரலாற்றை வாட்ஸ்அப் மூலம் படிக்கக்கூடாது என்றும் பேசினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ள டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் அங்கிருந்த கடை ஊழியரிடம் ஏதோ மராத்தியில் கேட்டுள்ளார். அதற்கு அந்த கடை ஊழியர் இந்தியில் பதிலளித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மராத்தி பேச மறுத்ததால் அறை
ஒரு கட்டத்தில் அந்த கடை ஊழியர், "நான் மராத்தியில் பேசமாட்டேன், இந்தியில்தான் பேசுவேன். எனக்கு மராத்தி தெரியாது. உன்னால் முடிந்ததைச் செய்" எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அங்குச் சென்ற மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியினர் அந்த நபரை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். மேலும், சரமாரியாகக் கன்னத்திலும் அறைந்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.
இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு மராத்தி பேச மறுத்தால் அவர்களுக்கு அறை விழும் என்று தெரிவித்தார். மேலும் மொழி விவகாரத்தில் தங்கள் கட்சி பின்வாங்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ராஜ் தாக்கரே
மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடந்த மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் வருடாந்திர பேரணியில் பேசிய ராஜ் தாக்கரே, "எங்கள் மும்பைக்கே வந்து அவர்கள் மராத்தி பேச முடியாது என்று எங்களிடமே கூறுகிறார்கள். இப்படிச் சொன்னால் அவர்கள் முகத்தில் அறை வாங்குவார்கள். இது நாட்டிற்காக.. நாட்டின் வளர்ச்சிக்காக என்றெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் தாய் மொழி இருக்கிறது. அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டிற்குப் பாராட்டு
நாளை முதல், ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் போய் பாருங்கள்.. அங்கே மராத்தி பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்யுங்கள். நீங்கள் அனைவரும் மராத்திக்காக உறுதியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டைப் பாருங்கள். அவர்கள் மொழி விவகாரத்தில் உறுதியாக இருக்கிறார்கள்.. இந்தி வேண்டாம் என்று சொல்லும் தைரியம் அவர்களுக்கு இருக்கிறது. கேரளா கூட இந்தியை துணிச்சலாக எதிர்கிறார்கள்.
வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதையும், சாதிய கண்ணோட்டத்தில் மக்களைப் பார்ப்பதையும் நிறுத்துமாறு மகாராஷ்டிர இளைஞர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காக உங்களைப் பிரிக்கிறார்கள். மராத்தியர்கள் ஒன்றாகச் சேர்வதைத் தடுக்கவே இப்படிச் செய்கிறார்கள். சாதிய விவகாரங்களில் இளைஞர்களின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, அதானிக்கு நிலங்களை வழங்குவது போன்ற பணிகள் சத்தமே இல்லாமல் நடக்கிறது" என்றார்.
அவுரங்கசீப்பின் கல்லறை
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குல்தாபாத் பகுதியில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளது குறித்துப் பேசி அவர் ராஜ் தாக்கரே, "மராட்டியரால் தோற்கடிக்கப்பட்டவர்களின் கட்டமைப்புகளை நாம் அழிக்கக்கூடாது. மராட்டியம் மீது படையெடுத்தவர்களை நாம் புதைத்துவிட்டோம் என்பதை உலகம் அறிய வேண்டும்.
இன்று திடீரென எல்லாருக்கும் அவுரங்கசீப் குறித்து ஞாபகம் வந்துவிட்டது. திடீரென காலை ஒரு படத்தைப் பார்த்துவிட்டு இதுபோல பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிக்க முடியாது.. நீங்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும். 400 ஆண்டுகள் பழமையான வரலாறு இன்று நாம் மோதக் காரணமாக மாறக்கூடாது" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications