குஜராத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட அனுமதிப்பதா? பொங்குது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா
மும்பை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் 19-ந் தேதி வரை நடைபெறும். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அக்டோபர் 15-ந் தேதி நடைபெற இருக்கிறது. இப்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டிதான் பேசுபொருளாகி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான குஜராத் கிரிக்கெட் போட்டி பெரும் எதிர்பார்ப்பையும் பல்வேறு அரசியல் விவாதங்களையும் கிளப்பிவிட்டுள்ளது.
இன்னொரு பக்கம் அகமதாபாத் வர்த்தகர்கள், இப்போதே கிரிக்கெட் போட்டியை முன்வைத்து பல்வேறு ஆஃஃபர்கல் உள்ளிடவைகளையும் அறிவித்து வருகின்றனர். இரு நாடுகளிடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாளுக்கான ஹோட்டல் முன்பதிவுகள், விறுவிறுவென நடைபெறுகிறது. இதனை பயன்படுத்து நாள் வாடகையை சர்வசாதாரணமாக ரூ10,000, ரூ15,000 என உயர்த்தியும் இருக்கின்றனர். இப்போதே நட்சத்திர ஹோட்டல்கள் பெரும்பாலும் புக் ஆகியும் விட்டனவாம்.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. மகாராஷ்டிராவின் ராஜ்தாக்கரே தலைமையிலான் நவநிர்மாண் சேனாவை சேர்ந்த சந்தீஷ் தேஷ்பாண்டே இது தொடர்பாக கூறியதாவது: நமது ராணுவ வீரர்களை படுகொலை செய்தவர்கள் பாகிஸ்தானியர்கள். பாகிஸ்தான் நாட்டுடன் நமது வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதை எப்படி ஏற்க முடியும்? இந்தியாவில் நடத்தப்பட்ட அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் பின்னணியில் இருப்பது பாகிஸ்தான். அந்த நாட்டுடன் சேர்ந்து நாம் விளையாடுவது எப்படி சரியாகும்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் விளையாடும் போது, பாகிஸ்தான் கொடியுடன் பாகிஸ்தானியர்களும் வருவார்கள். இதனை நாம் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இருநாடுகளிடையே பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண வேண்டும். இவ்வாறு சந்தீஷ் தேஷ் பாண்டேகூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications