ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்த அலைமோதிய மக்கள்.. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி
மும்பை: மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா உடல் மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த திரண்டு வந்தனர். நேரம் செல்ல செல்லம் கூட்டம் அதிகமானதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
இந்தியா மட்டும் இன்றி சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற தொழில் அதிபர் ரத்தன் டாடா. 100 நாடுகள், 6 கண்டங்களில் 30 நிறுவனங்களுக்கு மேல் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. 86 வயதான ரத்தன் டாடா நேற்று இரவு உயிரிழந்தார். இவரது மறைவு நாடு முழுவதும் தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரத்தன் டாடாவுக்கு கோடிக்கணக்கான மக்கள் சமூகவலைதளங்களில் இரங்கல் பதிவிட்டு தங்களது துக்கத்தை பகிர்ந்து உள்ளனர். மும்பையில் வைக்கப்பட்டு இருந்த ரத்தன் டாடா உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்கில் வைக்கப்பட்டுள்ள ரத்தன் டாடா உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்த திரண்டு கொண்டே இருந்தனர். இளைஞர்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்த காத்திருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத கூட்டத்தால் அங்கு நெரிசல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால், போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதையடுத்து கூட்டத்தினை போலீசார் கட்டுப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications