Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடை பெற்றார் ரத்தன் டாடா.. மகாராஷ்டிராவில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் - ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

மும்பை: நமது நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவரது உடல் இன்று பொதுமக்கள் இறுதிச்சடங்கிற்கு வைக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இரவு 7 மணியளவில் ரத்தன் டாடா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

நமது நாட்டின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா.. சர்வதேச அளவில் டாடா குழுமத்தை இந்தளவுக்கு மிகப் பெரியளவில் எடுத்துச் சென்றதில் முக்கியமானவர் ரத்தன் டாடா.

ratan tata tata

ரத்தன் டாடா காலமானார்: கடந்த சில காலமாகவே அவர் உடல்நிலை பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் நேற்றிரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

ரத்தன் டாடாவின் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. மாலையில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்தன் டாடா உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினர். நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொழில் அதிபர் முகேஷ் அம்பானியும் நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்து இருந்தார். அதன்படி இன்று இரவு 7 மணி அளவில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அரசு மரியாதை: மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இந்தியத் தொழிற்துறையில் மிக முக்கிய முகமாகப் பார்க்கப்பட்ட ரத்தன் டாடா மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ரத்தன் டாடா உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்து இருந்தது. கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி லாவோஸ் நாட்டிற்கு சென்றுள்ள நிலையில், மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ரத்தன் டாட இறுதி சடங்கில் கலந்து கொண்டார். அவர் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ரத்தன் டாடாவை ஜாம்பவான் என்று புகழ்ந்த மகாராஷ்ட்டிரா முதல்வர், 150 ஆண்டுகள் பழமையான நிறுவனமான டாடா குழுமத்தை வெற்றிகரமாக வழிநடத்தியதில் ரத்தன் டாடாவின் பங்கு முக்கியமானது என்று குறிப்பிட்டார். மேலும், ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்பதையும் அவர் உறுதி செய்தார்.

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008ம் ஆண்டு தாக்குதல் நடத்திய போது டாடா எப்படி உறுதியாக இருந்தார் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். 2008 தாக்குதலில் ரத்தன் டாடாவின் தாஜ் ஹோட்டல் மீது தாக்குதல்கள் நடத்தியது. அந்தக் காலகட்டத்தில் ரத்தன் டாடா துரிதமாக நடவடிக்கை எடுத்ததற்காக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்: முன்னதாக ரத்தன் டாடாவின் உடல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தெற்கு மும்பையில் உள்ள தேசிய கலை அரங்கில் (NCPA) பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது. அது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பொதுமக்கள் கேட் 3 வழியாக என்சிபிஏ அரங்கில் வருமாறு கேட்டுக்கொள்கிறோம், அஞ்சலி செலுத்திவிட்டு கேட் 2 வழியாக வெளியேற வேண்டும். வளாகத்தில் பார்க்கிங் வசதி இருக்காது. வர்லி, டாக்டர் ஈ மோசஸ் சாலையில் மாலை 4 மணிக்கு, இறுதிச் சடங்குகள் நடைபெறும்" என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+