கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி.. இப்போதைக்கு இல்லை.. தள்ளிப்போகும் ரிலீஸ் - காரணம் என்ன?
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் நடித்து வெளியாகவுள்ள எமர்ஜென்சி திரைப்படத்தில் சீக்கியர் சமூகத்தினரை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சையாகியுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்த நடிகை கங்கனா ரனாவத் பாஜக எம்பியாக உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சியை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்துக்கு எமர்ஜென்சி என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கங்கனா ரனாவத் இயக்கி, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டிருந்த போது நிகழ்ந்த சம்பவங்கள், அரசியல் நடவடிக்கைகள், இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது நிகழ்ந்த சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இப்படத்தில் சீக்கியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்த திரைப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக இருந்தது.
படத்தின் டிரைலர் கடந்த 14ம் தேதி வெளியானது. டிரைலர் காட்சிகள் வெளியாகியதைத் தொடர்ந்து பஞ்சாபில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் எமர்ஜென்சி திரைப்படத்துக்கு இதுவரை சென்சார் போர்டில் இருந்து தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இன்னும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சில காட்சிகளை நீக்க வேண்டும் என்ற உத்தரவால் எமர்ஜென்சி படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து படக் குழுவினர் தணிக்கை அதிகாரிகளிடம் பேசிய நிலையில், ஒவ்வொரு சமூகத்தினரது உணவர்வுகளையும் கருத்தில் கொண்டு செயல்படுவதாக தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிவருவது பேசுபொருளாவது வழக்கம். சமீபத்தில் காங்கிரஸ், ராகுல் காந்தி குறித்து தவறாக சித்தரித்து படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். பாலிவுட்டில் யாருக்கும் மூளையே இல்லை. அவர்களுடன் நான் பழகுவதே இல்லை என்றும் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் கங்கனா. ஏற்கெனவே இவர் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசிய வழக்கில் சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பெண் ஊழியர் பளார் என்று அறை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த சில வாரத்துக்கு முன்பு பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் குறித்து மீண்டும் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகவுள்ள 'எமொ்ஜென்சி' ஹிந்தி திரைப்படத்தை தெலங்கானாவில் வெளியிடத் தடை செய்வது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. எமர்ஜென்சி படத்தில் சீக்கியா்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளதால், சீக்கிய அமைப்பினா் தடை விதிக்கக் கோரியுள்ளனா். விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா சா்ச்சைக்குரிய கருத்து கூறியுள்ள நிலையில், அந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய சீக்கிய விவசாயிகளும் அவர் மீது அதிருப்தியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்திராகாந்தி கொலை, பிந்திரன்வாலே, பஞ்சாப் கலவரம் போன்ற சம்பவங்களை படத்தில் காட்சிப்படுத்தக் கூடாது என்று தங்களுக்கு மிரட்டல் வருவதாகவும், படத்தில் என்ன காட்சிகள் வருகிறது என்ற கேள்விகளும பலமாக எழுவதாகவும், எதையும் என்னால் நம்ப முடியாத தருணமாக உள்ளது, இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று அண்மையில் கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications