Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"படகில் இறங்கிய பயங்கரவாதிகள்!" ஆண்டுகள் கடந்தாலும் ஆறாத காயம்! மும்பை தாக்குதல்! அன்று நடந்தது என்ன

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதை அவ்வளவு சீக்கிரம் எந்தவொரு இந்தியனும் மறக்க மாட்டார்கள்,

15 ஆண்டுகளாக்கு முன்பு, கடந்த 2008இல் இதே நாளில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. இந்தத் தாக்குதல் நடந்து 15 ஆண்டுகள் ஆகின்றன.

Remembering Mumbai Terror Attacks on 15 Years Of 26/11 attack

26/11 தாக்குதல் என்று அழைக்கப்படும் என்று தாக்குதல் இந்திய வரலாற்றில் நடந்து மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது. மும்பையில் 10 பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதல் உலகெங்கும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை தாக்குதல்: கடந்த 2008 நவ. 26ஆம் தேதி இரவு மும்பையில் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறிவைத்துத் தாக்குதலை நடத்தினர். பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் பயங்கரவாதிகள் 166 பேரைக் கொன்றனர். மேலும், இதில் 300 பேர் காயமடைந்தனர். எங்குத் தாக்குதல் நடத்தினால் அதிகபட்ச பாதிப்பு ஏற்படும் என்பதைக் கண்டறிந்து தாக்குதல் நடத்த அவர்கள் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்கள், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், நாரிமன் ஹவுஸில் உள்ள யூத மையம் மற்றும் லியோபோல்ட் கஃபே எனப் பயங்கரவாதிகள் தங்கள் இலக்குகளைக் கவனமாகத் தேர்வு செய்தனர். ஏனெனில் இந்த இடங்களில் தான் இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அதிகம் இருப்பார்கள்.

மறக்கவே முடியாது: அந்த நான்கு நாட்களும் ஒவ்வொரு இந்தியனுக்கும் மறக்கவே முடியாதவை. திடீரென மும்பையில் பல்வேறு இடங்களிலும் இப்படி ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அங்குள்ள பலரும் இந்தியாவில் ஏதோ போர் ஆரம்பித்துவிட்டது என்றே கருதினர். அந்தளவுக்கு அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து மீன்பிடி படகு மூலம் அவர்கள் மும்பையில் வந்திறங்கியுள்ளனர். மும்பையில் இறங்கியதும் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். தங்கள் கண்களில் பட்ட அனைவரையும் சரமாரியாகச் சுட்டுத்தள்ளினர். அவர்களைச் சமாளிக்க மும்பை சாலைகளில் ராணுவம் இறக்கப்பட்டது. மும்பையில் முக்கிய பகுதிகளில் நான்கு நாட்கள் வரை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அஜ்மல் கசாப்: சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திய அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டான். அவன் மீது உரிய வழக்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவனுக்குக் கடந்த மே 2010 மாதம் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 2012இல் அவன் தூக்கிலிடப்பட்டான்.

அன்றைய தினம் நமது இந்தியா ராணுவம் காட்டிய துணிச்சலை உலகமே கண்டு வியந்தது. இதில் 15 போலீசார், 2 என்எஸ்ஜி கமேண்டோக்கள் உயிரிழந்தனர். மொதத்மாக இந்தத் தாக்குதலில் 29 வெளிநாட்டினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.

அன்று ஏற்பட்ட வடுக்கள் இன்றும் இருக்கிறது. நாட்டை உலுக்கிய அந்த மோசமான தாக்குதலில் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் பல.. அதன் பிறகு இந்தியா பாதுகாப்புத் துறையில் எடுத்த நடவடிக்கைகளால் மீண்டும் அதுபோன்ற ஒரு மோசமான தாக்குதல்கள் நடைபெறுவது தடுக்கப்பட்டன. அந்த மோசமான பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+