விரைவில் நாடு முழுவதும் புதிய 20 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Reserve Bank of India (RBI) has announced a new 20-rupee banknotes that will soon be released in circulation
மும்பை: நாடு முழுவதும் விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு, அவை புழக்கத்தில் விடப்பட உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள ரூ. 100, ரூ.50, ரூ.20 ஆகிய நோட்டுகளில் புதிய வண்ணத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே ரூ.100, ரூ.50 புதிய நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து திட்டமிட்டப்படி தற்போது ரூ.20 புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் இந்த நோட்டு அச்சிடப்பட்டு உள்ளது.
மேலும் எல்லா ரூபாய் நோட்டுகளில் இருப்பது போலவே, தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, விரைவில் வெளிவர உள்ள புதிய 20 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
ரூபாய் நோட்டின் மறுபக்கம் எல்லோரா குகைகளின் படம் அச்சிடப்பட்டிருக்கும் என தகவல் தெரிவித்துள்ளது. நம் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை விவரிக்கும் வகையில், புதிய 20 ரூபாய் நோட்டுகளின் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவம் வெளியிடப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.
புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள, அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications