சரத்பவாரின் என்.சி.பி.யிலும் பிளவு? சபாநாயகர் தேர்தலில் வாக்களிக்காத 5 எம்.எல்.ஏக்களால் பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸிலிலும் கலகக் குரல் வெடித்துள்ளதா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. மகாராஷ்டிரா சபாநாயகர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வராததால் இந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டே வளைத்துப் போட்டார். பாஜகவுடனான இந்த அரசியல் நாடகத்தால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே இழந்தார்.

இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முதல்வராக்கியது. துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். இப்போது சிவசேனா கட்சி பெயர், சின்னம் யாருக்கு என்கிற கிளைமேக்ஸ் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அதிருப்தி சிவசேனா- பாஜகவுடனான வேட்பாளர் ராகுல் நர்வேகர் அமோக வெற்றியைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனாவின் ராஜன் சால்விக்கு 107 வாக்குகள்தான் கிடைத்தன.
இத்தேர்தலில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேர் வாக்களிக்காதது ஏன்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அக்கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் சிறையில் உள்ளதால் வாக்களிக்க முடியாது. ஆக மொத்தம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 எம்.எல்.ஏக்கள் இன்று வாக்களிக்கவில்லை.
சிவசேனாவை போல தேசியவாத காங்கிரஸிலும் கலகக் குரல் வெடித்திருக்கிறதா? என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இந்த எம்.எல்.ஏக்கள் விவகாரம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications