என்னுடன் பழகுவதற்கு முன்பே.. சுஷாந்த்சிங் கஞ்சாவுக்கு அடிமை.. ரியா சக்கரவர்த்தி பரபரப்பு வாக்குமூலம்
மும்பை: சுஷாந்த் சிங் கஞ்சாவுக்கு அடிமையானவர் என நடிகை ரியா சக்கரவர்த்தி போதை பொருள் தடுப்புப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது மரணம் குறித்து மர்மம் நீடித்து வருகிறது.

அமலாக்கத் துறை
சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அப்போது சுஷாந்தின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ் ஆப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

போதை பழக்கம்
இதுகுறித்து விசாரணை நடத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடிகை ரியா சக்கரவர்த்தி உள்பட சிலரை கைது செய்தார்கள். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மூத்த சகோதரி பிரியங்கா சிங், மைத்துனர் சித்தார்த் ஆகியோரும் சேர்ந்து கஞ்சாவை பயன்படுத்தினார்கள் என ரியா தெரிவித்தார்.

கஞ்சா
சுஷாந்த் கஞ்சாவை பயன்படுத்தியது அவரது குடும்பத்தினருக்கு தெரியும். நிறைய தடவை அவரது குடும்பத்தினரே கஞ்சா வாங்கி கொடுத்துள்ளனர். என்னுடன் பழகுவதற்கு முன்பே சுஷாந்த் சிங் கஞ்சாவுக்கு அடிமையானவர் என ரியா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரங்கள்
இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில் ஒருவரின் வாக்குமூலத்தை வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதற்கு வலுவான ஆதாரங்கள் வேண்டும். ரியாவின் வாக்குமூலம் குறித்து விசாரித்து வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications