“பாயிண்ட் பிளாங்க்”..ரயிலில் இருந்த பயணி சையத்! துப்பாக்கியால் தலையை சிதறடித்து கொன்ற ஆர்பிஎப் வீரர்
மும்பை: ஜெய்பூர் - மும்பை ரயில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சையத் என்ற பயணியின் தலையில் துப்பாக்கியை வைத்து பேண்ட்ரி காருக்கு அழைத்து சென்று ஆர்பிஎப் காவலர் சேத்தன் சிங் சுட்டுக் கொன்றதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜெய்பூரில் இருந்து மும்பை நோக்கி கடந்த திங்கள்கிழமை சென்றுகொண்டு ஏராளமான பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது. அதிகாலை 5 மணியளவில் இந்த ரயில் மும்பை ரயில் நிலையம் வந்தடைவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக வைதர்னா என்ற ரயில் நிலையத்தை தாண்டி பால்கர் அருகே இந்த சென்று கொண்டு இருந்தது.

அப்போது ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரரான சேத்தன் சிங், ரயில்வே பாதுகாப்பு படையில் உயரதிகாரியாக இருந்த எஸ்.ஐ டீக்காராம் மீனாவையும், 3 ரயில் பயணிகளையும் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். முதலில் ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ. டீக்காராம் மீனாவை சுட்டுக் கொன்றபின் பி5 என்ற பெட்டிக்கு சென்று ஒரு பயணியை சேத்தன் சிங் சுட்டுக் கொலை செய்தார்.
அதே வேகத்தில் எஸ் 6 என்ற பெட்டிக்கு சென்று அங்கு இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு பயணியையும் அவர் சுட்டுக் கொன்று உள்ளார். அதன் பின்னர் பி5 மற்றும் பி6 பெட்டிகளுக்கு இடையே இருக்கும் பேண்ட்ரி காரில் இருக்கும் மற்றொரு பயணியையும் ஆர்பிஎப் காவலர் சேத்தன் சிங் கொலை செய்து உள்ளார்.
சேத்தன் சிங் கொலை செய்த 3 பயணிகளும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அக்தர் அப்பாஸ் அலி (48), காதிர்பாய் முஹம்மது ஹுசைன் பன்புர்வாலா (58) ஆகியோர் முதலில் அடையாளம் காணப்பட்ட நிலையில் மூன்றாவது நபரின் பெயர் சையது என்பதும் அவரது வயது 43 என்றும் தெரியவந்து இருக்கிறது.
அத்துடன் சையது எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. சையதுக்கு பி2 என்ற பெட்டியில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அதில் அவர் அமர்ந்து பயணித்துக் கொண்டு இருந்த நிலையில் ஆர்பிஎப் காவலர் சேத்தன் சிங் கொலை வெறியில் துப்பாக்கியுடன் அங்கு வந்தார்.
தனது தலையில் ஆர்பிஎப் வீரர் சர்வீஸ் துப்பாக்கியை வைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார் சையத். சேத்தன் சிங், சையதின் தலையில் வைத்த துப்பாக்கியை எடுக்காமல் அவரை இருக்கையில் இருந்து எழுந்து நடக்க சொல்லி மிரட்டி இருக்கிறார். சையதும் உயிரை கையில் பிடித்துக்கொண்டே பதற்றத்துடன் எழுந்து சென்று இருக்கிறார்.
அப்போது பி2 பி1 பெட்டிகளை கடந்துசென்ற பேண்ட்ரி கார் அருகே சையதை அழைத்து சென்று மற்ற பயணிகளின் கண் முன்பாகவே பாயிண்ட் பிளாங் எனப்படும் தலையில் துப்பாக்கி முனையை வைத்து சுட்டார். என்ன நடக்கிறது என்று சையத் உணர்வதற்குள்ளாகவே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பின்னர் ரத்த வெள்ளத்தில் பயணி சையத் கீழே கிடந்த போதுதான், "நான் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்தவர்களையே கொலை செய்தேன். இந்தியாவில் வாழ வேண்டும் என்றால் மோடிக்கும் யோகிக்கும் ஓட்டு போட வேண்டும்." என்று பேசினார். அவரது இந்த வீடியோ நேற்று வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications