Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 முஸ்லிம்கள்,எஸ்ஐ-யை கொன்ற மும்பை ஆர்பிஎப் போலீஸ்காரர் சேட்டன் சிங் மீது ஆக்ஷன்.. என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜெய்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த மாதம் தனது உயர் அதிகாரி மற்றும் 3 முஸ்லிம் பயணிகளை சுட்டுக் கொலை செய்த ஆர்பிஎப் வீரர் சேட்டன் சிங் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த ஜூலை 31 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை நோக்கி ஏராளமான பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டு இருந்தது. வைதர்னா என்ற ரயில் நிலையத்தை கடந்து பால்கர் அருகே இந்த ரயில் சென்றுகொண்டு இருந்தது.

RPF police Chetan singh who killed 3 passengers and SI dismissed

இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சேத்தன் சிங் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அவருடன் அவரது உயர் அதிகாரியான, பட்டியல் சமூகத்தை சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படை உயரதிகாரி எஸ்ஐ டீக்காராம் மீனாவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் சேத்தன் சிங் டீக்காராம் மீனாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

அதை தொடர்ந்து அக்தர் அப்பாஸ் அலி (48), காதர் பன்புர்வாலா (58), சையது சைபுத்தீன் (43) ஆகிய 3 முஸ்லிம் பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ. டீக்காராம் மீனாவை கொன்ற சேத்தன் சிங், அதன் பின்னர் பி 5 என்ற பெட்டியில் உள்ள ஒரு பயணியை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

அங்கிருந்து பி 6 என்ற பெட்டிக்கு சென்ற அவர் அங்குள்ளவரையும் கொடூரமாக கொலை செய்தார். அதை தொடர்ந்து பி5 மற்றும் பி6 பெட்டிகளுக்கு இடையே இருந்த பேண்ட்ரி காருக்கு சையத் என்ற பயணியை துப்பாக்கி முனையில் அழைத்து சென்றும் சேத்தன் சிங் சுட்டுக்கொலை செய்து உள்ளார்.

சையதை கொன்ற பின், அவரது உடலை கீழே கிடத்திவிட்டு, "பாகிஸ்தானோடு தொடர்பில் இருந்தவர்களையே கொலை செய்தேன். மோடிக்கும் யோகிக்கும் ஓட்டு போட்டால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்." என்றார். 4 பேரையும் கொன்றபின் அபாய சங்கிலில் பிடித்து இழுத்து தப்பிச் செல்ல முயன்ற சேத்தன் சிங்கை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

RPF police Chetan singh who killed 3 passengers and SI dismissed

அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே முதலில் விளக்கம் அளித்தது. ஆனால், இஸ்லாமிய பயணிகள் அமர்ந்திருக்கும் இடங்களுக்கு தேடி சென்று தாடி வைத்து இருப்பவராக பார்த்து அவர்களை சுட்டுக் கொன்றவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கேள்வியை பலர் எழுப்பினர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையே கொலை செய்த சேட்டன் சிங் மனநல பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை மூத்த மண்டல பாதுகாப்பு ஆணையர், ஆர்பிஎப் வீரர் சேட்டன் சிங்கை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து உள்ளார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+