பதுக்கிட்டாங்களா.. ரூ.10,000 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுக்கள் எங்கே? ரிசர்வ் வங்கி பரபர அறிவிப்பு
மும்பை: மதிப்பிழப்பு செய்யப்பட்டு இருக்கும் ரூ.2000 நோட்டுக்களில் ரூ.10,000 கோடி மதிப்பிலான நோட்டுக்கள் இன்னும் தங்களுக்கு வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
வங்கிகள், ஏடிஎம்கள் வணிக நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் கடந்த ஓராண்டாகவே 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று குறிப்பிட்டு இருந்தது. அதன் சுழற்சியும் அப்போதே ரிசர்வ் வங்கியால் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரூ.2000 நோட்டுக்கள் செல்லாமல் போயின. அதற்கு முன்பாகவே ஏராளமான பொதுமக்கள் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றினர். ஆனாலும், பலரால் பணத்தை முழுமையாக மாற்ற முடியவில்லை என கூறப்பட்டது. இந்த நிலையில், வங்கிகளில் பணத்தை மாற்றுவதற்கு அக்டோபர் 7 ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி அவகாசம் கொடுத்தது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில், "அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பிறகும் இந்த நோட்டுகளை ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மாற்றிக் கொள்ள முடியும். தபால் மூலமாகவும் ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு இந்த நோட்டுகளை பொதுமக்கள் அனுப்பி, வங்கிக் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம். அரசுத் துறைகள் வரம்பு ஏதுமின்றி 2000 ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம். மற்ற வங்கிக் கிளைகளில் வைப்போ அல்லது பணத்தை மாற்றிக்கொள்ளவோ முடியாது.
இதுவரை ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டு இருக்கின்றன. 97 சதவீதத்திற்கும் நோட்டுகள் திரும்ப கிடைத்து இருக்கின்றன. ரூ.10,000 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வரவில்லை. அவகாசம் நிறைவடைந்த பிறகும் பொதுமக்கள் ரூ.2000 நோட்டுக்களை நாடு முழுவதும் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் கொடுத்து பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். அங்கு செல்ல முடியாதவர்கள் தபால் துறையை பயன்படுத்திக் கொள்ளலாம்." என்றார்.
கடந்த 2016 ஆம் அண்டு நவம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சிகளில் தோன்றி செல்லாது என்று அறிவித்தார். இதனால் நாடே கடும் இன்னல்களுக்கு ஆளானது. அதற்கு மாற்றாக ரிசர்வ் வங்கி பிங்க் நிற 2000 ரூபாய் நோட்டு மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த 2000 ரூபாய் நோட்டைதான் தற்போது மதிப்பிழப்பு செய்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications