முடிவெடுப்பதில் சஞ்சு சாம்சன் வல்லவர்.. ஆனால் கேப்டனாக பின்வாங்க தயங்க கூடாது.. ஸ்ரீசாந்த் அட்வைஸ்!
கேப்டனாக பின் வாங்குவதற்கு கூட சஞ்சு சாம்சன் தயங்க கூடாது என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
மும்பை: கேப்டனாக பல்வேறு முடிவுகளை எடுப்பதில் வல்லவராக இருக்கும் சஞ்சு சாம்சன், எந்த முடிவில் இருந்தும் பின் வாங்குவதில் தயக்கம் காட்டக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. சென்னை, ராஜஸ்தான், கேரளா, பெங்களூரு ஏன் அயர்லாந்தில் கூட சஞ்சு சாம்சனை காண அதிகளவில் ரசிகர்கள் திரண்டனர்.
இதனை கணக்கில் கொண்டு சஞ்சு சாம்சனை கேப்டனாக்கியதன் மூலம் ராஜஸ்தான் அணி சிறப்பான முடிவை முன்னதாக எடுத்துள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரில் நீண்ட அனுபவம் கொண்ட சஞ்சு சாம்சனின் கேப்டன்சி பலரையும் கடந்த முறை ஆச்சரியப்படுத்தியது.

கேப்டன் சஞ்சு சாம்சன்
அனுபவ வீரர் அஸ்வின் மற்றும் சஹாலை பயன்படுத்திய விதம், வீரர்களின் தேர்வு என்று கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் பலரின் பாராட்டையும் பெற்றார். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் சஞ்சு சாம்சனுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

ஸ்ரீசாந்த் அட்வைஸ்
அதில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் மிகவும் அட்டாக்கிங் கேப்டனாக வலம் வருகிறார். ஆனால் சில நேரங்களில் நாம் பின் வாங்குவதற்கும் தயக்கம் காட்டக் கூடாது. அதனை மட்டுமே சஞ்சு சாம்சனிடம் தொடர்ந்து கூறி வருகிறேன். ஏனென்றால் யாராக இருந்தாலும் அட்டாக் மற்றும் டிஃபெண்டிங்கில் கட்டுக்கோப்புடன் இயங்க வேண்டும். அந்த கட்டுப்பாட்டை சஞ்சு சாம்சன் அடைந்துவிட்டார்.

முடிவு எடுப்பதில் வல்லவர்
ஆனால் இன்னும் கேப்டன்சியில் கற்றுக் கொண்டே இருக்கிறார். அதேபோல் பலம் மற்றும் பலவீனத்தை கண்டறிந்து சிறந்த முடிவை எடுப்பதில் சஞ்சு சாம்சன் வல்லவராக இருக்கிறார் என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு முதல் முறையாக கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியை இரண்டாம் முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார்.

பிரசித் கிருஷ்ணா காயம்
இதனால் நடப்பாண்டில் ராஜஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதேபோல் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக யார் விளையாடப் போகிறார்கள், அவரது இடத்தை நிரப்பப் போகும் வீரரை சஞ்சு சாம்சன் எப்படி தேர்வு செய்கிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவரது பேட்டிங்கை பார்ப்பதற்காக ராஜஸ்தான் அணி ரசிகர்களும் ஆவலாக இருக்கின்றனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications