LKGக்கு மட்டும் 14 லட்சம் Fees! ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய் வாரிசுகள் படிக்கும் அம்பானி பள்ளி
மும்பை: முகேஷ் அம்பானியின் மனைவி நடத்திவரும் இண்டர்நேஷனல் பள்ளியில் பால்வாடி வகுப்பில் படிப்பதற்கே ஒரு பிள்ளைக்கு ரூ.1,400,000 கட்டணமாகப் பெறப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கிழக்கு பாந்த்ராவில் இயங்கி வருகிறது திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூல். இதைக் கடந்த 2003 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி நிறுவினார். பாலிவுட் நட்சத்திரங்கள் குடியிருக்கும் பகுதியில் இந்தப் பள்ளி இயங்கி வருவதாலும் அம்பானி பள்ளி என்பதாலும் இதற்கு மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது.

நீத்தா அம்பானி ரிலையன்ஸ் பவுண்டேசன் அறக்கட்டளையின் தலைவராக இருந்து வருகிறார். இந்தியப் பணக்கார பெண்களில் ஒருவரான இவரது சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் நடத்திவரும் பள்ளியில் கிட்டத்தட்ட 1000 பிள்ளைகள் படித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள மதிப்பு மிக்க பள்ளிகளில் ஒன்றாக இது விளங்கி வருகிறது.
இங்கே மழலையர் முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கேதான் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான் எனப் பல பாலிவுட் சினிமா நட்சத்திரங்களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர். அதனால் என்ன? இப்போது அதைப் பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்? என நீங்கள் பதற்றம் ஆக வேண்டாம்.
இந்தப் பள்ளிப் பற்றி சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்றுதான் இப்போது இதைப் பற்றிப் பேச வைத்துள்ளது. இந்தப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா ஒன்றின்போது எடுக்கப்பட்ட அந்த காணொளிப் பதிவு சில உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. மூன்றுவேளை உணவுக்கே உத்தரவாதம் இல்லாமல் பல லட்சம் குழந்தைகள் பரிதவித்து வரும் இந்தியாவில் ஒரு பிள்ளை இங்கே படிப்பதற்காகப் பல லட்சங்களைக் கட்டணமாக இந்தப் பள்ளி வசூலித்து வருகிறது.
இந்த ஸ்கூல் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் மற்றும் கேம்பிரிட்ஜ் சர்வதேச கல்வி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ICSE மற்றும் IGCSE ஆகியவற்றுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தி வருகிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளிலேயே சர்வதேச இளங்கலை டிப்ளமோ படிப்பை வழங்க அங்கீகாரம் பெற்றுள்ளது.
ஆகவே, இங்கே ஒவ்வொரு வகுப்புக்கும் சர்வதேச கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியின் 2023-2024 கல்வியாண்டிற்கான கட்டணம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைக்கு ரூ.1,400,000 வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 12 ஆம் வகுப்புக்கு ரூ.2,000,000 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிரப் புத்தகங்கள், சீருடைகள், போக்குவரத்து செலவு எனப் பல உள்ளன.
எனவே இங்கே சாதாரண வகுப்பினர் பிள்ளைகள் படிக்க முடியாது. இந்தக் கட்டணங்களைப் பற்றி எல்லாம் கவலையே இல்லாத ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன், ஷாருக் கான் மகன் சைஃப் அலி கான், கரீனா கபூரின் மகன்களான தைமூர் அலி, ஜெஹ் அலி ஆகியோர் படித்து வருகின்றனர்.
மேலும் ஜான்வி கபூர், சுஹானா கான், குஷி கபூர், இப்ராஹிம் அலி கான், ஆர்யன் கான், சாரா டெண்டுல்கர், நைசா தேவ்கன் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோரும் இந்த அம்பானி இண்டர்நேஷல் பள்ளியில் படித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற ஆண்டுவிழாவில் இவர்கள் கலந்துகொண்டதால் இந்தத் தகவல் வெளியே வந்துள்ளது. சமூக ஊடகத்தில் பரவிய வீடியோவில் இந்த நட்சத்திரங்கள் தங்களின் பிள்ளைகளுடன் பங்கேற்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்த பாலிவுட் ஸ்டார்கள் பங்கேற்றதைவிட இந்தப் பள்ளியின் கட்டணம் தான் பலரது வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications