பாஜக- சிவசேனா சேர்ந்தது மகா கூட்டணி.. அப்போ காங்- என்சிபி- சிவசேனா கூட்டணிக்கு என்ன பெயர் தெரியுமா?
Recommended Video
மும்பை: சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணிக்கு மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி என பெயரிட போவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மகாராஷ்டிரத்தில் தேர்தல் முடிவுகள் வந்து ஒரு மாத காலமாகியும் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாததால் இன்னும் அங்கு புதிய அரசு அமையவில்லை. இதையடுத்து குறிப்பிட்ட காலஅவகாசம் கொடுக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இன்னும் 6 மாதங்களுக்கு மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி அமைய வேண்டும். இதற்காக காங்கிரஸ், என்சிபி ஆகிய கட்சிகளுடன் சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சபாநாயகர்
இந்த பேச்சில் முதல்வர் பதவி, துணை முதல்வர் பதவி யாருக்கு, ஒவ்வொரு கட்சிகளுக்கும் எத்தனை அமைச்சர் பதவிகள், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவி யாருக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றன.

ஆலோசனை
இந்த நிலையில் பாஜக- சிவசேனா கூட்டணிக்கு மகா கூட்டணி (மகாயுதி) என பெயரிடப்பட்டிருந்தது. அது போல் காங்கிரஸ், சேனா, என்சிபி இணையும் கட்சிக்கும் பெயர் வைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

காங்கிரஸ்
இதில் மகாராஷ்டிர சிவ முன்னணி (மகா சிவா ஆகாதி) என பெயர் வைக்க சேனா ஆலோசனை வழங்கியது. ஆனால் இதற்கு காங்கிரஸும் என்சிபியும் உடன்படவில்லை. அதோடு கூட்டணிக்கான பெயரில் எந்த கட்சியின் பெயரும் இருக்கக் கூடாது.

தகவலறிந்த வட்டாரங்கள்
தேசிய அளவில் பெரிய கூட்டணிகளான தேசிய ஜனநாயக கூட்டணியிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் எந்த கட்சியின் பெயரும் இல்லை என இரு கட்சிகளும் கூறியுள்ளன. இதனால் மூவர் இணையும் கூட்டணிக்கு மகா விகாஸ் ஆகாதி, அதாவது மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி என பெயரிட முடிவு செய்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications