மகாராஷ்டிராவில் சுயேட்சை வேட்பாளரிடம் படுதோல்வி அடைந்த பாஜக மூத்த தலைவரின் மகள்!
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக அரசில் அமைச்சராகவும், பாஜக மூத்த தலைவராகவும் உள்ளவர் ஏக்நாத் கட்சே. இவரது மகள் ரோகிணி கட்சே சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். முன்னதா பங்கஜ் முண்டே தோல்வி அடைந்தார். இவரும் மறைந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார்.
மகாராராஷ்டிராவில் சற்று முன் நிலவரப்படி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் 91 இடங்களில் முன்னிலை (மொத்தம் 101) வகிக்கிறது.

இதேபோல் சிவசேனா கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் 51 இடங்களில் (மொத்தம் 59) முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், 39 இடங்களில் ( மொத்தம் 43) இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன் 51 இடங்களில் (மொத்தம் 55) முன்னிலை வகிக்கிறது. சுயேட்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார. பிற கட்சிகளும் சில இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இந்நிலையில்மகாராஷ்டிராவில் பாஜக அரசில் அமைச்சராகவும், பாஜக மூத்த தலைவராகவும் உள்ளவர் ஏக்நாத் கட்சே. இவரது மகள் ரோகிணி கட்சே முக்தாய் நகரில் போட்டியிட்டார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சந்திரகாந்த் பாட்டீல் என்பவரிடம் தோற்றார்.
இதேபோல் மறைந்த பாஜக மூத்த தலைவரின் மகளான பங்கஜ் முண்டே பார்லி தொகுதியில் போட்டியிட்டார். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தனஞ்செய் முண்டேவிடம் தோல்வி அடைந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications