யாரை பாத்துடா அயிட்டம்னு சொன்னே.. காம வெறி இளைஞரை சாதுரியமாக பிடித்த பெண்!
விமான நிலைய பெண் ஊழியருக்கு இளைஞர் பாலியல் தொல்லை தந்துள்ளார்
மும்பை: யாரை பார்த்துடா 'அயிட்டம்'ன்னு சொன்னே.. என்று கேட்டு இளம்பெண் ஒருவர் இளைஞனை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.
மும்பை விமான நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார் அந்த இளம்பெண். விலே பார்லே என்ற பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று டியூட்டி முடித்துவிட்டு, தன்னுடன் வேலைபார்க்கும் சக ஊழியரின் காரில் ஏறியுள்ளார்.

அந்த ஊழியரோ, பெண்ணை ராஜேந்திர பிரசாத் என்ற நகரில் இறக்கிவிட்டு கிளம்பி விட்டார்.
தன்னுடைய வீட்டிற்கு அங்கிருந்து செல்வதற்காக இளம் பெண் பஸ்ஸுக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது தினேஷ் என்ற 26 வயதுடைய இளைஞன் அங்கு வந்தார்.
ஃபுல் போதையில் இருந்தவர், இளம்பெண்ணை பார்த்ததும் அங்கேயே நின்றுவிட்டார். பிறகு "அயிட்டம்" என்று சொல்லி அசிங்க அசிங்கமாக பேச ஆரம்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. தினேஷை பார்த்து திட்டவும் இல்லை. அமைதியாக நின்றிருந்தார்.
பிறகு அந்த இளைஞன் அவன் வீட்டுக்கு போதையிலேயே நடக்க ஆரம்பித்தான். அப்போது இளம்பெண்ணும், தினேஷுக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்தார். தினேஷ் அவரது வீட்டுக்கு செல்லும்வரை கவனித்த இளம்பெண், உடனே அங்கிருந்து கொண்டே தன்னுடைய கணவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்.
இதையடுத்து, அவர்கள் விரைந்து வரவும், தினேஷை பிடித்து கொண்டு போய் போலீசில் ஒப்படைத்தனர். ஆபாசமாக பேசிய இளைஞரை, அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சாதுர்யாக பிடித்து போலீசில் ஒப்படைத்த இந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications
