ஆர்யன்கான் ஜாமீனில் விடுதலை.. 28 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார்.. உதவிய பிரபல நடிகை!
ஆர்யன்கானுக்கு ஜூஹி சாவ்லா உத்தரவாதம் தந்துள்ளார்
மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் 28 நாட்களுக்கு பிறகு இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்... இதையடுத்து குடும்பத்தினரும் ரசிகர்களும் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
போதை மருந்து பயன்படுத்தியதாகப் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், ஆர்யன்கானுக்கு 2 முறை ஜாமீன் மறுக்கப்பட்டது.. ஆனாலும் இந்த 3 வாரங்களாகவே ஷாருக்கான் மகனுக்கான சட்ட போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வந்தார்.

உத்தரவாதம்
அவருடைய ஜாமீன் மனு 2 முறை நிராகரிக்கப்பட்டதால் மும்பை ஹைகோர்ட்டில் மேல் முறையீடு செய்து பிறகு ஜாமீன் பெற்றார்.. ரூ. 1 லட்சம் மற்றும் ஒரு தனி நபர் உத்தரவாதத்தில் ஜாமீன் தரப்பட்டுள்ளது.. ஆர்யன் கானுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜூஹிசாவ்லா ஜாமீன் அளித்துள்ளார்... இதற்காக அவர் மும்பை கோர்ட்டில் ஆஜரானார்.

ஜாமீன்
அவரது வக்கீல் சதீஷ் மான்ஷிண்டே, ஆர்யன் கானுக்கு உத்தரவாதம் அளிப்பதாக சொல்லி, அவரது ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட்டை அளித்தார்.. ஜூஹி சாவ்லாவும் இதை ஒப்புக் கொண்டு சாட்சி கூண்டில் ஏறி சம்மதம் தந்தார்.. ஆர்யன் கானை நடிகை ஜூஹிக்கு பிறந்தது முதல் தெரியும் என்றும் ஆர்யன் கானின் அப்பா ஷாருக்கானுடன் அவர் தொழில் முறையில் நன்கு பழகி உள்ளதாகவும் வக்கீல் கோர்ட்டில் தெரிவித்தார். இதையடுத்து, ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
Recommended Video

குற்றவாளிகள்
பல்வேறு நிபந்தனைகளை கோர்ட் ஆர்யன்கானுக்கு விதித்துள்ளது. ஆர்யன் வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தால், அனுமதி வாங்கித்தான் செல்லவேண்டும், நீதிமன்ற விசாரணை குறித்து ஊடகங்களுக்கு எந்தவித அறிக்கையும் வெளியிடக்கூடாது, சக குற்றவாளிகளுடனும், போதைப்பொருள் வழக்கில் தொடர்புடையவர்களிடமும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது, சாட்சியைக் கலைக்க கூடாது, பாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும், வெள்ளிக்கிழமைகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பன உட்பட மொத்தம் 14 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆர்யன்கான்
இதுகுறித்து ஜூஹி சொல்லும்போது, "இதில் முக்கியமானது என்னவென்றால் ஆர்யன் கான் வீட்டுக்கு திரும்புவது தான்?" என்றார். எனினும் ஆர்யன் கானுக்கு நடிகை ஜூகி சாவ்லா, ஷூரிட்டி தந்தது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.. காரணம், பிறந்தது முதலே ஆர்யன்கானை தெரியும்.. ஷாருக்கானுடன் ஆரம்ப கால கட்டங்களில் இணைந்து நடித்தவர் ஜுஹி ஆவார்.. இதற்கு முன்பு பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி போதை வழக்கில் இருந்து ஜாமீன் பெற்றபோது அதே வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஒவ்வொருவராக ஜாமீன் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று விடுதலை
ஆர்யன் கானை விடுவிப்பதற்கான ஜாமீனை கோர்ட்டு பிறப்பித்தாலும், நேற்று மாலை 5.30 மணிக்குள் சிறைக்கு சென்று ஆணையை சமர்பிக்க வேண்டும்... ஆனால், அதன்படி சமர்பிக்க முடியாமல் போனதால், ஆர்யன் கானால் நேற்று சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை... அதனால் இந்த நடைமுறைகள் இன்றைய தினம் சனிக்கிழமைதான் முடிவடையும் என்பதால், ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரும் இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.

வெளியே வந்தார்
இன்று காலையில் இருந்தே ஆர்யன்கானை வரவேற்க ஏராளமான ரசிகர்கள் சிறைவாசலில் கூடியிருந்தனர்.. ஊடகத்தினரும் ஷாருக்கானின் ரசிகர்களும்கூட சிறைச்சாலை வாசலில் முன்கூட்டியே குவிந்திருந்தனர்... மகனை அழைத்து வர ஷாருக்கான் அங்கே ஆவலுடன் தவித்தபடியே காத்திருந்தார்.. இந்நிலையில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் ஆர்யன் கான் வெளியே வந்தார்... அவரை குடும்பத்தினரும், ரசிகர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.. நவம்பர் 2 ம் தேதி ஷாருக்கின் பிறந்தநாள் வர உள்ள நிலையில், ஆர்யனின் விடுதலை அவருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications