"ஆனந்த கண்ணீர்" விட்ட ஷாருக்கான்.. "ஐ லவ் யூ" 3 வார்த்தை வைரல் செய்தி.. திக்குமுக்காடிய குடும்பம்
ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து ஷாருக்கான் மகிழ்ச்சியில் உள்ளார்
மும்பை: ஷாருக்கான் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்து வருகிறது.. மகனுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்று சொன்னதுமே ஷாருக்கான் ஆனந்தக்கண்ணீரில் திளைத்துள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர்... மொத்தம் 17 பேர் கைதாகி உள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சிறையில் இருந்தநிலையில், வழக்கு விசாரணையும் துரிதமாக நடந்து வந்தது.. மற்றொரு பக்கம், ஜாமீன் கோரி ஆர்யன் கான் தரப்பில் மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

போதை பொருள்
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து வந்தது.... காரணம், ஆர்யன்கான் போதை பொருளை பயன்படுத்தும் பழக்கம் உடையவர் என்பது நிரூபணமானது. அத்துடன், ஆர்யனின் வாட்ஸ் அப் சாட்கள் சர்வதேச போதைபொருள் கடத்தல்காரர்களை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் ஆர்யன் கான் போதை பொருள் விற்றுள்ளார்.. அதனால்தான் அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.. அதனால்தான் ஜாமீனும் மறுக்கப்பட்டது...

பிரச்சனை
மற்றொருபக்கம், அதானியின் துறைமுகத்தில் பிடிப்பட்ட போதைபொருள் தொடர்பான விவகாரத்தை மூடி மறைக்கவே, ஆர்யன்கான் விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட ஆரம்பித்தன.. அவ்வளவு ஏன், கான் என்ற பெயர்தான் இவர்களுக்கு பிரச்சனை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

சீனியர் வக்கீல்
இதனிடையே, என்ன ஆனாலும்சரி, மகனுக்கு ஜாமீன் பெற்றே தீர்வது என்று ஷாருக்கான் படாத பாடு பட்டு வந்தார்.. எத்தனையோவிதமான சட்டப் போராட்டங்களையும் மேற்கொண்டார்..இந்த ஜாமீன் மனு மீதான விசாரணைக்காக சீனியர் வக்கீல் முகுல் ரோஹத்கியை ஷாருக்கான் லண்டனில் இருந்து வரவழைத்திருந்தார்...இறுதியில் யாரும் எதிர்பாரா வகையில் கைதாகி 3 வாரத்திற்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது... இப்போதுதான் ஷாருக்கான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.. 3 வார காலம் அவர்அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.. 3 வாரம் வீட்டிற்குள்தான் அடைந்து கிடந்தார்.. ஒருநாள் மட்டுமே சிறைக்கு சென்று பார்த்து வந்தார்..
Recommended Video

ஷாருக்கான்
முதல்முறையாக மகன் வெளிவந்ததும், ஜாமீனுக்காக வாதாடிய வக்கீல்களுடன் ஒரு க்ரூப் போட்டோ எடுத்து கொண்டார் ஷாருக்கான்.. எல்லார் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி புன்னகை.. நிம்மதி உணர்வு தென்படுகிறது.. இன்றுதான் முறைப்படி தீர்ப்பு விவரங்கள் வெளியாக உள்ளது.. அந்த தீர்ப்பு நகல் பெற்றுக் கொண்டு, இன்ன பிற நடைமுறைகளையும் முடித்து விட்டுதான் ஆர்யன் வெளியே வர முடியும்.. இதற்கான பணிகளில் வக்கீல்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.. ஜாமீன் குறித்து முகுல் சொல்லும்போது, "ஜாமீன் குறித்து ஷாருக்கானிடம் தெரிவித்தபோது மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் விட்டார்" என்றார்..

பட்டாசுகள்
ஷாருக்கான் வீடு இப்போது விழாக்கோலம் பூண்டுள்ளது... ரசிகர்கள் திரண்டு அவர் வீட்டு முன்பு கூடி வருகின்றனர்.. பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஷாருக்கானின் இன்னொரு மகன் ஆப்ரஹாம், தன் வீட்டு பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார்.

போட்டோக்கள்
இப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணத்தில், ஷாருக்கான் மகளும், ஆர்யன் கான் மற்றும் தந்தை ஷாருக்கானுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.. இவருக்கு 23 வயதாகிறது.. சுஹானா தனது குழந்தைப் பருவத்தின் படங்களின் படத்தொகுப்பையும், "ஐ லவ் யூ" என்ற எளிய 3 வார்த்தைகள் கொண்ட செய்தியையும் வெளியிட்டார்.. இந்த போட்டோக்கள் பிளாக் & ஒயிட்டில் உள்ளது.. அத்தனை போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துவிட்டது.












Click it and Unblock the Notifications