ரத்தன் டாடாவின் “இளம் தோழன்”.. உதவியாளர் சாந்தனு நாயுடுவின் சொத்து மதிப்பு தெரியுமா?
மும்பை: கடந்த சில ஆண்டுகளாக ரத்தன் டாடாவுக்கு உதவியாளராக, அவருடன் நெருக்கமாகப் பணியாற்றி வந்தவர் சாந்தனு நாயுடு. 30 வயது இளைஞரான சாந்தனு ரெட்டி, இந்தியாவின் மிக மூத்த தொழிலதிபரான ரத்தன் டாடாவுடன் நெருக்கமான நண்பரைப் போல திகழ்ந்தார். தனது உதவியாளரின் ஸ்டார்ட் அப்பிலும் முதலீடு செய்தார் ரத்தன் டாடா. அதன் மூலம் சாந்தனு நாயுடு, சில கோடிகளுக்கு சொந்தக்காரர்.
இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்திய தொழிலதிபர் ரத்தன் டாடா. டாடா கால் பதிக்காத தொழில் துறையே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு பல்வேறு பரந்துபட்ட துறைகளில் களமிறங்கி சாதித்துக் காட்டியவர். உப்பு பாக்கெட், தண்ணீர் பாட்டில் முதல் விமான போக்குவரத்து நிறுவனம் வரை வைத்திருக்கிறது டாட்டா.

ரத்தன் டாடா: தனது நிறுவனம் வளர வளர, மக்களுக்கு தொண்டு செய்வதையும் அதிகப்படுத்திக்கொண்டே இருந்தார் ரத்தன் டாடா. வாழும் காலம் முழுமைக்கும், மக்களுக்குப் பயனுள்ள வகையில் இயங்கிக் கொண்டே இருந்த ரத்தன் டாடா நேற்று மும்பையில் காலமானார். அனைவரிடமும் எளிமையாக பழகுவது உள்ளிட்ட பல விஷயங்கள் ரத்தன் டாடாவின் சிறப்பம்சங்கள்.
ரத்தன் டாடாவிடம் கடந்த சில ஆண்டுகளாக தனி உதவியாளரகாப் பணியாற்றியவர் இளைஞரான சாந்தனு நாயுடு. இந்தியாவின் டாப் தொழிலதிபரான ரத்தன் டாடாவை கவர்ந்து, அவருக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றார் சாந்தனு. 2014-ல் புனே பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்ற சாந்தனு நாயுடு ஆரம்பத்தில் டாடாவில் வடிவமைப்புப் பொறியாளராகப் பணியாற்றினார்.
சாந்தனு நாயுடு: ஒரு நாள் தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது நடுரோட்டில் நாய் ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு வேதனைப்பட்ட சாந்தனு நாயுடு, இதற்கு மேல் இது போன்று நாய்கள் சாலை விபத்தில் இறக்கக் கூடாது என்று தோன்றவே, தன்னுடன் சில நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு ரிஃப்ளெக்டர் காலர் என்ற புதிய கண்டுபிடிப்பை வடிவமைத்தார். இந்த காலர் மூலம் ஓட்டுனர்கள் தூரத்தில் இருந்து நாயைக் கவனித்து மெதுவாகச் செல்ல முடியும்.
அடுத்த நாள் அவரும் அவருடைய நண்பர்களும், அப்பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு இந்த ரிஃப்ளெக்டர் காலர்களை கட்டி விட்டனர். அதன் மூலம், ஒரு நாய் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது. இந்தச் செய்தி, டாடா குழுமத்தின் நியூஸ் லெட்டரில் இடம்பெற்ற நிலையில், பலரும், தங்கள் நாய்களுக்கு இந்த காலர்களை செய்து தரும்படி சாந்தனுவிடம் கேட்டனர்.
ரத்தன் டாடாவுக்கு கடிதம்: அப்போது, அதை அதிக எண்ணிக்கையில் செய்வதற்கான போதிய பணம் தன்னிடம் இல்லாத நிலையில், அது பற்றி ரத்தன் டாடாவுக்கு கடிதம் எழுதினார் சாந்தனு. நாய்கள் மீதான ரத்தன் டாடாவின் பிரியம் அனைவரும் அறிந்தது என்பதால், இந்த விஷயத்தில் டாடா உதவுவார் என எதிர்பார்த்தார். 2 மாதங்களில் ரத்தன் டாடாவிடம் இருந்து பதில் கடிதம் வந்தது. அந்த உயரிய தொழிலதிபர், இளைஞரான சாந்தனுவை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, ரத்தன் டாடாவை சென்று சந்தித்தார் சாந்தனு நாயுடு. அவரது திட்டங்களை கேட்டு தெரிந்துகொண்ட ரத்தன் டாடா, அவரது மனதைப் புரிந்துகொண்டு, தனது அறக்கட்டளைக்காக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் எம்.பி.ஏ படிக்க வெளிநாடு சென்ற சாந்தனு, இந்தியா திரும்பியதுமே மீண்டும் டாடாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
உதவியாளராக பணியாற்ற அழைத்த டாடா: என் அலுவலகத்தில் என் உதவியாளராகப் பணிபுரிய விரும்புகிறீர்களா எனக் கேட்டு அழைப்பு வந்துள்ளது. ரத்தன் டாடா கண்ணசைத்தால் உடனே ஓடிச் செல்ல கோடிக்கணக்கானோர் உள்ள நிலையில் அவரே தன்னை அழைத்த நிலையில், 2018 ஆம் ஆண்டு, ரத்தன் டாடாவின் உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்தார் சாந்தனு. தற்போது டாடாவின் அலுவலகத்தில் பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறார் சாந்தனு நாயுடு.
சாந்தனு நாயுடுவை தனது மகன் போல நடத்தினார் ரத்தன் டாடா. வயது வித்தியாசமின்றி தோழனைப் போல ரத்தன் டாடாவிடம் பழகினார் சாந்தனு. ரத்தன் டாடா செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்ற துணையாக அவரை அழைத்துச் சென்று, அவருக்கு வேண்டியதைச் செய்து வந்தார் சாந்தனு நாயுடு.

முதியோருக்கு உதவும் ஸ்டார்ட் அப்: சாந்தனு நாயுடு, மூத்த குடிமக்களுக்கு உதவும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினார். குட்ஃபெல்லோஸ் என்ற அந்த நிறுவனத்தின் மூலம் வயதானவர்களுக்கு அவர்களது கடைசி காலத்தில் தேவையான உதவிகளை செய்து வருகிறார் சாந்தனு நாயுடு. இந்த ஸ்டார்ட் அப்பில் அவருடன் பல இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளனர். இந்த ஸ்டார்ட் அப்பின் சந்தை மதிப்பு கடந்த ஆண்டிலேயே ரூ.5 கோடி. அதிலும் ரத்தன் டாடா முதலீடு செய்தார்.
சாந்தனு நாயுடு, GoodFellows ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கிய நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட ரத்தன் டாடா, சாந்தனு உள்ளிட்ட அனைவரையும் வாழ்த்தி இருந்தார். இந்த நிறுவனத்தின் இளைஞர்கள் மூத்த குடிமக்களுக்கு ஒரு நண்பர் அல்லது பேரக் குழந்தை இடத்தில் இருந்து, அவர்களுடன் வாக்கிங் போவது, கேரம் போர்டு விளையாடுவது உள்ளிட்ட பல விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொள்வார்கள்.
கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ரத்தன் டாடாவுக்கு, சாந்தனு நாயுடுவின் ஐடியாவும், அவரது அன்பும் பிடித்துப்போகவே, அவரை பாசமாக கூடவே ஒரு தோழனைப் போல வைத்திருந்தார். ரத்தன் டாடாவின் மறைவு, அவருக்கு உற்ற துணையாக வாழ்ந்து வந்த சாந்தனு நாயுடுவுக்கும் பேரிழப்பு.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications