முக்கிய பதவி எதையும் விட்டுக்கொடுக்காத பாஜக.. மகனுக்கு துணை முதல்வர் போஸ்ட் கோருகிறார் ஷிண்டே
மும்பை: மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து மீண்டும் முதல்வராக ஆக ஷிண்டே முயற்சிக்க.. பாஜக கராறாக மறுத்திருக்கிறது. எனவே தனது மகனுக்கு அவர் துணை முதல்வர் பதவியை கோரியுள்ளார்.
தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருக்கிறது. எனவே இந்த மாநிலத்தில் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எழுந்தது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய முதல்வருக்கான போட்டியும் எழுந்திருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணிதான் ஜெயித்திருந்தது. ஆனால், பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனா (அப்போது ஒன்றுபட்ட கட்சியாக இருந்தது) தனித்து வந்து காங்கிரஸ்+தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது.

இதனால் ஆட்சியை இழந்த பாஜக, சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. இங்குதான் ஷிண்டே முக்கிய பங்காற்றினார். அதாவது ஒன்றுபட்ட சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவராக ஷிண்டே இருந்து வந்தார். தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை வைத்திருந்த அவர், பாஜகவுடன் டீலிங்கை போட்டு, ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். இதனால் உத்தவ்தாக்ரே சிவசேனா+காங்கிரஸ்+தேசியவாத காங்கிரஸ் கூட்டணியான மாக விகாடி அகாஸ் ஆட்சியை இழந்தது.
பாஜகவுக்கு ஷிண்டே செய்த உதவியால் அவருக்கு முதல்வர் பதிவி கொடுக்கப்பட்டது. இந்த பதவி குறித்து கடும் சண்டைகள் எழுந்திருந்தன. பாஜகவின் மூத்த தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இருக்கும்போது ஷிண்டேவுக்கு எதுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று சர்ச்சை வெடித்தது. ஆனாலும் ஃபட்னாவிஸை சமாதானப்படுத்திய பாஜக, அவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்து கூல் செய்தது.
ஆனால் இந்த முறை முதல்வர் பதவியை விட்டுத்தர பாஜக தயாராக இல்லை. ஃபட்னாவிஸ்தான் முதல்வர் என்று அடித்து கூறுகிறது. ஷிண்டே ஒப்புக்கொள்ளவே இல்லை. கடைசியில் ஓகே சொல்லிவிட்டு, உள்துறை அமைச்சர் பதவி எனக்கு வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். முதல்வர் பதவிக்கு பலமே, உள்துறை அமைச்சகம்தான். அதை தூக்கி கொடுத்துவிட்டு எங்க ஆளை டம்மி முதல்வராக உட்கார சொல்கிறீர்களா? என பாஜக காட்டமாக கேள்ளி எழுப்பி, ஷிண்டேவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இதனால் அப்சட்டான ஷிண்டே பேச்சுவார்த்தையை கைவிட்டு விட்டு, தனது சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டார். கடந்த 2 நாட்களாக அங்கு தங்கியிருந்த ஷிண்டே, இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் மும்பை வந்திருக்கிறார். இந்த முறை சபாநாயகர் பதவியை சிவசேனாவுக்கு கேட்க இருக்கிறார். அதையும் பாஜக கண்டிப்பாக கொடுக்காது. எனவே, தனது மகனுக்கு துணை முதல்வர் பதவியையை கேட்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications