ஷிண்டேவா பட்நாவிஸ்ஸா? தடுமாறும் பாஜக மேலிடம்.. மகாராஷ்டிராவின் முதல்வர் யார்? ஏன் குழப்பம்?
மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் பாஜகவில் இருந்துதான் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ஏக்நாத் ஷிண்டேவை பாஜகவிலேயே ஒரு தரப்பு தீவிரமாக ஆதரிப்பதாக செய்திகள் வருகின்றன. இதனால் அடுத்த முதல்வர் யார் என்பதில் குழப்பம் உள்ளது.
மகாயுதி கூட்டணியில், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் அகியோர் போட்டியில் உள்ளனர். இதில் ஏக்நாத் ஷிண்டே தற்போது முதல்வராக உள்ளார். பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார் என்கிறார்கள். ஆனால் பாஜக கிட்டத்தட்ட தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது.

தனிப்பெரும்பான்மை நம்பர்ஸ்: இத்தனை ஆண்டுளாக பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தார். அவர் மீண்டும் முதல்வராகவே விரும்புவார். அவர் முதல்வர் ஆகும் பட்சத்தில் ஏக்நாத் ஷிண்டே கூட்டணியை முறிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இப்படிப்பட்ட குழப்பான சூழலில்தான் பாஜகவில் இருந்துதான் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் பாஜக தனிப்பட்ட வகையில் 132 இடங்களை வென்றுள்ளதால்.. பாஜகவே முதல்வர் பதவியை ஏற்க விரும்பும். பாஜக மெஜாரிட்டி பெற 13 இடங்களே போதும். இதனால் ஷிண்டே ஆதரவே தேவை இல்லை.. அஜித் பவார் ஆதரவுடன் முதல்வராகலாம்.
இதனால் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளன. ஷிண்டே முதல்வர் பதவியை இழக்க நேரிடலாம். ஷிண்டே எதிர்த்தால்.. அவரின் கட்சி பிரிவு உடைக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால் மீண்டும்.,. கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து தேவேந்திர பட்னாவிஸ் அங்கே முதல்வராகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
அதே சமயம் ஏக்நாத் ஷிண்டேவை பாஜகவிலேயே ஒரு தரப்பு தீவிரமாக ஆதரிப்பதாக செய்திகள் வருகின்றன. ஷிண்டே பதவியை பறித்தால் சிவசேனாவில் அவரது பிடி விலகும். அப்படி நடந்தால் மீண்டும் உத்தவ் தாக்கரேவின் எழுச்சிக்கு அது காரணமாக மாறிவிடும் என்று பாஜகவிலேயே பலர் நினைக்கிறார்களாம். இதனால் அடுத்த முதல்வர் யார் என்பதில் குழப்பம் உள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் கடந்த வாரம் ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.
மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முதல்நாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மகாராஷ்டிரா: காங்கிரஸ் 16, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் - 10 இடங்கள், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக 50 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிரா: பாஜக கூட்டணி - பாஜக 132 இடங்கள், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 31, ஷிண்டே சிவசேனா - 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ள. பாஜக கூட்டணி மொத்தமாக 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் நிலவரம்: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 149 இடங்களில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகியவை முறையே 81 மற்றும் 59 இடங்களில் போட்டியிட்டது
எதிர்க்கட்சிகள் தரப்பில், காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார் பிரிவு) முறையே 95 மற்றும் 86 இடங்களிலும் போட்டியிட்டது. மேலும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) 17 இடங்களில் போட்டியிட்டது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் முதல்வரை தேர்வு செய்வதில் வந்த மோதலில் சிவசேனாவை கூட்டணியில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து, மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியது. இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், மகா விகாஸ் அகாடி ஆட்சி செய்தது.
ஆனால் அதன்பின் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து ஆட்சி கவிழ்ந்தது. அதோடு தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரால் உடைந்தது. இவர்கள் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவசேனா ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆனது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications