மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடுகிறது.. சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது. பாஜக ஆட்சியமைப்பதற்காக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை வேட்டையாடுவதாக அதன் கூட்டணி கட்சியான சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக உள்ளது. இன்று முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான பாஜக உறுப்பினர்கள் மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர்.

Recommended Video

    மகாராஷ்டிரத்தில் பாஜக அல்லாத ஆட்சி அமைக்க சிவசேனா வியூகம்!-வீடியோ

    இந்நிலையில்தான் பாஜக ஆட்சியமைப்பதற்காக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை வேட்டையாடுவதாக அதன் கூட்டணி கட்சியான சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

    மகாராஷ்டிரம்: ஆளுநரை சந்திக்கும் பாஜக.. அடுத்தடுத்த நகர்வுகளால் பரபரக்கும் அரசியல் களம்மகாராஷ்டிரம்: ஆளுநரை சந்திக்கும் பாஜக.. அடுத்தடுத்த நகர்வுகளால் பரபரக்கும் அரசியல் களம்

    பணசக்தி

    பணசக்தி

    சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில், மகாராஷ்டிரா மக்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் ஆனால் அரசாங்கம் அமைப்பதில் உள்ள முட்டுக்கட்டைகளை உடைக்க பாஜக பண சக்தியை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி எழுதப்பட்டுள்ளது.

    மதிப்பற்ற அரசியல்

    மதிப்பற்ற அரசியல்

    "சிலர் புதிய சிவசேனா எம்எல்ஏக்களை பண சக்தியுடன் வெல்ல முயற்சிக்கின்றனர். இது போன்ற புகார்கள் அதிகரித்து வருகின்றது. இது போன்ற மதிப்பு இல்லாத அரசியலை சிவசேனா அனுமதிக்காது" என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    சிவசேனா முதல்வர்

    சிவசேனா முதல்வர்

    "முந்தைய அரசு (பாஜக அரசு) பண அதிகாரத்துடன் புதிய அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால் யாரும் விவசாயிகளுக்கு உதவவில்லை, எனவே விவசாயிகள் ஒரு சிவசேனாவைச் சேர்ந்தவரை முதல்வராக்க விரும்புகிறார்கள்" என்றும் அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவசேனா பயப்படுகிறது

    இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த், "சிவசேனா பாஜகவின் கூட்டணி பங்காளியாகும். அந்த கட்சியோ தங்கள் எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடுவதாக பயப்படுகிறது என்றால் எந்த அளவுக்கு தார்மீக ரீதியாக பாஜக ஊழல் செய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். நாம் அவர்களிடம் இருந்து மகாராஷ்டிராவை காப்பாற்ற வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான தார்மீக உரிமை உள்ளதா?" என்ற கேள்வி எழுப்பினார்.

    சிவசேனா தகவல்

    சிவசேனா தகவல்

    இதனிடையே "பாஜகவின் சுதிர் முங்கதிவார் விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறுகிறார் அவர் நல்ல செய்தியை பற்றி மட்டும் கூறுகிறார். எண்ணிக்கையை பற்றி அல்ல. மகாராஷ்டிராவின் கவுரவத்தை அழிக்க யாரும் நினைக்கக்கூடாது. சிவசேனா மகாராஷ்டிராவின் கௌரவத்தை காக்கும் வாள்களாக இருக்கும். இருப்பினும் இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கு சிவசேனா தயாராக இருக்கிறது.அதற்கான கதவுகள் திறந்தே உள்ளளது " என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

    English summary
    Shiv Sena's editorial mouthpiece Saamana accusing its ally Bharatiya Janata Party (BJP) of poaching MLAs
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X