சட்டவிரோதமாக குடியேறிய பாக்., வங்கதேச முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும்..... சிவசேனா திட்டவட்டம்
மும்பை: இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என சிவசேனா தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில் பாஜக அணியில் சிவசேனாவுக்கு பதிலாக ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா இணைகிறது. மேலும் இந்துத்துவா கொள்கையை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக ராஜ்தாக்கரே தமது கட்சியின் கொடியில் மாற்றங்களையும் செய்துள்ளார்.
கட்சி கொடியை காவி நிறத்திலும் அதில் சத்ரபதி சிவாஜியின் முத்திர வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேச நாடுகளின் முஸ்லிம்களை வெளியேற்ற கோரி பிப்ரவரி 9-ல் போராட்டம் நடத்தப் போவதாகவும் ராஜ்தாக்கரே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.
ஆனால் ராஜ்தாக்கரே தமது கட்சியின் கொடியை மாற்றியதுதான் விசித்திரமாக உள்ளது. சிவசேனா எப்போதும் கட்சி கொடியை மாற்றியது கிடையாது. எப்போதும் சிவசேனாவுக்கு காவி கொடிதான்.. இந்துத்துவா கொள்கைக்காக எப்போதும் சிவசேனா போராடும். குடியுரிமை சட்ட திருத்தத்தில் பல்வேறு ஓட்டைகள் உள்ளன.
இதே குடியுரிமை சட்ட திருத்தத்தை மக்களை பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே அமித்ஷா பயன்படுத்துகிறார் என ராஜ்தாக்கரே கூறியிருந்தார். இப்போது அதே குடியுரிமை சட்ட திருத்தத்தை ராஜ்தாக்கரே ஆதரிக்கிறார். இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications