அந்த கொரோனா மட்டும் என் கையில கெடச்சா.. அப்படியே எடுத்து பட்னவீஸ் வாய்ல போட்ருவேன்.. சிவசேனா எம்எல்ஏ
மும்பை: இந்த கொரோனா கிடைத்தால் எடுத்து அப்படியே தேவேந்திர பட்னவீஸ் வாயில் போட்டுவிடுவேன் என புல்தானா சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சைக்குரியவகையில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2ஆவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் அலையிலும் சரி இரண்டாவது அலையிலும் சரி மகாராஷ்டிரா மாநிலத்தைவிட்டு கொரோனா போவதாக தெரியவில்லை.
தான் பிறந்த சீனாவை விட்டு கூட கொரோனா வெளியே வந்துவிட்டது. ஆனால் மகாராஷ்டிரா மீது ஏன் இத்தனை "பற்று" என கேட்கும் அளவுக்கு அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா அலை
இந்த நிலையில் நாடு முழுவதும் 2-ஆவது கொரோனா அலை உருவாக மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் காரணம் என சிவசேனா குற்றம்சாட்டி இருந்தது. இந்த நிலையில் புல்தானா சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் மாநில முதல்வருமான தேவேந்திர பட்னவீஸ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

முயற்சிகள்
இதுகுறித்து அவர் கூறுகையில் அரசியல் செய்ய இதுதான் நேரமா, இது போன்ற துயரங்களில் அரசியல் செய்ய பிரதமர் மோடியும் தேவேந்திர பட்னவீஸ் மகாராஷ்டிர முதல் முதல்வராக இருந்தால் மோடி இப்படி செய்வாரா? எங்கள் அரசு தோல்வி அடைந்ததாக காட்ட முயற்சிகள் நடைபெறுகின்றன.

அப்பாவி மக்கள்
ஆனால் அந்த முயற்சியில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து அமைச்சர்களும் கடுமையாக உழைத்து வரும் போது எதிர்க்கட்சியினர் உதவி செய்வதை விட்டுவிட்டு எங்களது முயற்சிகளை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதிர்ச்சி
ஒரு வேளை எனது கையில் கொரோனா வைரஸ் கிடைத்தால் அதை தேவேந்திர பட்னவீஸ் வாயில் போடுவேன். அந்த அளவுக்கு நான் அவரை வெறுக்கிறேன் என கெய்க்வாட் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலில் முதல் இடத்தில் இருக்கும் ஒரு மாநில எம்எல்ஏ இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications