அஜந்தா குகைக்குள் தண்ணீர் வரவில்லையாம்.. இதுதான் காரணமா.. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்
அஜந்தா குகைகளில் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதாம்
மும்பை: இந்தியாவின் முன்னணி சுற்றுலாத் தலமான அஜந்தா குகைகளுக்குள் தண்ணீர் வரவில்லையாம்.. இதற்கான காரணமும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது.
உலகப் புகழ் பெற்ற அஜந்தா குகைகள் மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் இருக்கின்றன.. இங்கு ஏராளமான பழம்பெரும் குகை சிற்பங்கள், பாறை ஓவியங்கள் நிறைந்துள்ளன.
அஜந்தா குகைகள் வகோரா நதியின் பள்ளத்தாக்கில் சயாத்ரி குன்றின்மேல் அமைந்துள்ளன... இந்த இடமே அமைதியான சூழலை உடையது.. மொத்தம் 30 குகைகள் இதே இடத்தில் உள்ளன..

கலைஞர்கள்
மிகப் பெரிய தூண்களுடன் கூடிய மண்டபங்கள், புத்தரின் சிலைகள், ஓவியங்கள் என ஒவ்வொரு பகுதியும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது... ஆரஞ்சு, நீலம், பச்சை போன்ற குறிப்பிட்ட கலர்களில் இந்த ஓவியங்களை தீட்டியுள்ளனர்.. திறமையான தொழில்நுட்பம் தெரிந்தவர்களால் மட்டுமே இவற்றை உருவாக்கியிருக்க முடியும், காரணம், 1500 ஆண்டுகள் கடந்தும் இந்த ஓவியங்கள் நிலைத்து இருப்பதற்குக் காரணம் அந்த கலைஞர்களின் நுட்பம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

குடிநீர் பிரச்சனை
அதனால்தான், குகை சிற்பங்கள், பாறை ஓவியங்கள் உள்ள பல்வேறு கலை அம்சங்கள் நிறைந்த அஜந்தா குகைள் யுனெஸ்கோ நினைவு சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது.. இந்த குகைகள் இன்றுவரை நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்றாலும், மரங்களும் புதர்களும் அடர்த்தியாக வளர்ந்து குகைகளை தற்போது முற்றிலுமாக மறைத்துவிட்டன... அதனால் குகை பற்றி யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. தற்போது ஒரு முக்கிய பிரச்சனை எழுந்துள்ளது.

தண்ணீர் பில்
அஜந்தா குகைகளுக்குள் தண்ணீர் வரவில்லையாம்... நிலுவைத் தொகை செலுத்தாததன் காரணமாக 2 வருடங்களாகவே இங்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. தண்ணீர் பில் ஏன் கட்டவில்லை என்று தெரியவில்லை.. அஜந்தா குகைகளுக்கு எப்போதுமே மகாராஷ்டிராவின் ஜீவன் பிரதிகாரன் என்ற அமைப்புதான் தண்ணீர் சப்ளை செய்து வருகிறது.. மகாராஷ்டிரா சுற்றுலாத் துறை ரூ.3.2 கோடி பணம் பாக்கி வைத்துள்ளதாம்.. தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவியும்போது, 2019-ல் இருந்தே தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் கிளப்பி வருகிறது.

தண்ணீர் பிரச்சனை
தண்ணீர் இல்லாததால், இங்குள்ள பூங்காவை முறையாக பராமரிக்கவும் முடியவில்லை.. மேம்பாட்டு பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாம். கடந்த ஜனவரி மாதம், இங்கு வந்திருந்த சுற்றுலா அமைச்சர் ஆதித்யா தாக்கரேவிடம் தண்ணீர் பிரச்சனையை பற்றி புகார் சொல்லியும் இப்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நிர்வாகத்தினர் கவலை தெரிவிக்கிறார்கள்.

சுற்றுலா பயணிகள்
சுற்றுலாப் பயணிகளுக்கும் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் குடிநீர் வழங்க ஆர்ஓ வசதி செய்து பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டாலும், தண்ணீர் பிரச்சனைக்கு மாநில அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நிர்வாகம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.. உலக புகழ்பெற்ற அஜந்தா குகைக்குள் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications