ஆர்எஸ்எஸ் அவதாரம்.. பாடகர் சங்கர் மகாதேவனா இது? நாக்பூரில் போற்றிப் பாடிட்டாரே! பேச்சை கேட்டீங்களா?
மும்பை: நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆண்டு விழாவில் பாடகர் சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அந்த அமைப்பை பற்றி பேசியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவாக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பு தற்போது மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் தாய் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்டு அமைப்பின் ஆண்டு விழா இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். இதில் சிறப்பு விருந்தினராக பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் கலந்துகொண்டார்.
அப்போது ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கே.பி.ஹெட்கேவாரின் நினைவிடத்தையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆர்.எஸ்.எஸ்-ன் 98-வது நிறுவன நாள் நிகழ்வில், மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் மத்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட அவர் அந்த நிகழ்வில் பேசியதாவது, "இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்காகவும், அகண்ட பாரதத்தின் சித்தாந்தத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டிற்காக செய்து வரும் பங்களிப்பை பாராட்டுகிறேன். இது பற்றி என்ன சொல்ல முடியும்? நான் உங்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். 'அகண்ட பாரதம்' என்ற நமது சித்தாந்தத்தை, நமது பாரம்பரியத்தை, நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் வேறு எவரையும் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்களிப்பு அதிகம். எந்தவொரு இசைக்குறிப்பும் (துண்) சர்கம் (இசைக்குறிப்புகள்) கொண்டது, கணினிகளுக்கு பின்னால் இருநிலைக் குறியீடுகள் இருப்பது போல், நமது நாடு ஒரு பாடலை போன்றது என்றால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சவால்களை கவனிக்கும், பின்னால் உள்ள இசைக் குறிப்புகளைப் போன்றவர்கள்.
#WATCH | Singer-composer Shankar Mahadevan at RSS Vijayadashami Utsav event in Nagpur, Maharashtra. He is here as the chief guest of the function. pic.twitter.com/JJGXF0Lo6g
— ANI (@ANI) October 24, 2023
இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகையில், "கலாச்சார மார்க்சிசம்" என்று அவர் குறிப்பிடுவதைப் பற்றிய தனது கவலைகளை வெளிப்படுத்தினார். அதை பிளவுபடுத்தும் சக்தி என்றும் ஏமாற்று சக்தி எனவும் விமர்சித்து உள்ளார். இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கென என ஒரு கீதத்தை சங்கர் மகாதேவன் இசையமைக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோகன் பகவத்தும் ஒரு இசைக் கலைஞர் என்பதால், இந்திய ராகத்தில் அணிவகுப்பு இசையை உருவாக்க வேண்டும் என்று அவர் ஆர்வமாக இருப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ். கீதத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல இது உதவும் என்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சங்கர் மகாதேவன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்ளும் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications