சொராபுதீன் என்கவுண்டர் வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Recommended Video
மும்பை: 13 வருடங்கள் கழித்த நிலையில், சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில், மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட 22 பேருமே விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது. போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை என்பது இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி, இந்த வழக்கின் அதிக முக்கிய நாள். அன்றுதான், கேங்ஸ்டர் என்று சொல்லப்படும், சொராபுதீன் ஷேக் அவர் மனைவி கவுசர் பீ, கூட்டாளி துளசிராம் பிராஜபதி ஆகியோர் குஜராத் போலீசாரால் 'கடத்தப்பட்டார்கள்'. ஆம், ஹைதராபாத்திலிருந்து பேருந்து மூலம், மகாராஷ்டிராவின் சாங்கிலி நகருக்கு சென்றபோதுதான் இந்த சம்பவம் நடந்தது.

4 நாட்கள் கழித்து, நவம்பர் 26ம் தேதி, அகமதாபாத் நகரம் அருகே, சொராபுதீன் ஷேக் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 29ம் தேதி, பனஸ்கந்தா மாவட்டத்தில், கவுசர் பீ உடல், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
2006ம் ஆண்டு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீசாரால், இரு மாநில எல்லையான சப்ரி என்ற இடத்தில் துளசிராம் பிரஜாபதி என்கவுண்டர் செய்யப்பட்டார். அகமதாபாத்திலிருந்து, ராஜஸ்தானுக்கு போலீசார் அழைத்துச் சென்றபோது துளசிராம் பிரஜாபதி தப்பியோட முயன்றதாகவும், அப்போது என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் போலீஸ் கூறியது.
இவை அனைத்துமே போலி என்கவுண்டர்கள் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, ராஜஸ்தான் உள்துறை அமைச்சராக இருந்த குலாப்சந்த் கட்டாரியா, குஜராத் டிஜிபியாக பதவி வகித்த பி.சி.பாண்டே மற்றும் பல மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், 2012ம் ஆண்டில், குஜராத்திலிருந்து மும்பை சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்குகளை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி, மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறி மகாராஷ்டிரா உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது.
2014ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி இந்த வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்குகில் தொடர்பு உள்ளவர் என்று சிபிஐ விசாரணை அதிகாரி அமிதாப் தாகூர் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். கட்டுமான நிறுவன அதிபர்கள் பட்டியல் சகோதரர்களிடம் அமித்ஷா 70 லட்சம் லஞ்சம் வாங்கினார் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அவர் பலன் பெற்றார் என்று அவர் தெரிவித்தார்.
இதேபோல துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் முக்கியமான ஒரு சதிகாரர் என்று 2006ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சிபிஐ விசாரணை அதிகாரி சந்தீப் தம்காட்ஜ், தெரிவித்திருந்தார். சிபிஐ தரப்பில் இது போலி என்கவுண்டர்தான் என்று இறுதிவாதம் எடுத்து வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே.ஷர்மா தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்த நிலையில் இன்று இவ்வழக்கின் தீர்ப்பு வெளியானது.
சொராபுதீன் உள்ளிட்டோரை போலீசார் பஸ்சிலிருந்து அழைத்துச் சென்றதற்கும், சட்ட விரோதமாக மறைத்து வைத்ததற்கும் ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை. துளசிராமை என்கவுண்டர் செய்ய ஆஷிஷ் பாண்ட்யா என்ற அதிகாரியை, அழைத்து வந்ததற்கான ஆதாரம் இல்லை. சிபிஐ தாக்கல் செய்த அனைத்து ஆதாரங்களும், சாட்சியங்களும் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமானதாக இல்லை. எனவே குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர மாநிலங்களை சேர்ந்த 21 ஜூனியர் போலீஸ் அதிகாரிகளும், சொராபுதீன், கவுசர் பீ ஆகியோர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட பண்ணை வீட்டு உரிமையாளரும் விடுதலை செய்யப்பட்டவர்களாகும்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications