கியார் புயல்.. தீவிர புயலாக மாறியது.. எங்கெங்கு கனமழைக்கு வாய்ப்பு? #KYARR
Recommended Video
மும்பை: கியார் புயல் நேற்று மாலை கிழக்கு மத்திய அரபிக் கடலில் தீவிர புயலாக மாறியது. இதனால் கர்நாடகத்துக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதையொட்டி அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து வானிலை மையமும் இது குறித்து எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் கிழக்கு மத்திய அரபிக் கடலில் நேற்று மதியம் புயல் உருவானது. இந்த புயலானது நேற்று மாலை வலுப்பெற்று தீவிர புயலாக மாறியது. இதற்கு கியார் என பெயரிடப்பட்டுள்ளது.

கடல் அலை
இது ரத்னகிரியிலிருந்து 190 கி.மீ. தூரத்திலும் மும்பையின் தென்மேற்கு பகுதியில் 330 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயலால் வரும் 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியை சுற்றிலும் உள்ள பகுதியில் கடல் அலை மிக உயரமாக காணப்படும்.

மிதமான மழை
இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் வடக்கு கொங்கன் பகுதியில் கனமழை பெய்யும்.

மிதமான மழை
அது போல் கடலோர மாவட்டங்களான கர்நாடகம், கோவா, தெற்கு கொங்கன் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

5 நாட்கள்
மகாராஷ்டிரத்தின் வடக்கு பகுதியில் இந்த புயல் தீவிர புயலாக மையம் கொள்ளும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்திற்கு கனமழை பெய்யும். அடுத்த 5 நாட்களில் இந்த புயல் ஓமனை நோக்கி செல்லும்.
-
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications