நடிகைகள் மீது சபலம்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், சாரா அலிகானுக்கு தூதுவிட்ட சுகேஷ் சந்திரசேகர்
மும்பை: பெங்களூர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருடன் நெருங்கி பழக்க அவருக்கு தூதுவிட்டது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சிறையில் இருந்தபடியே ரூ 200 கோடி மோசடி செய்த ஜகஜால கில்லாடி சுகேஷ் என அறியப்படுகிறார். இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகளும் டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை விசாரணை
இந்த நிலையில் அமலாக்கத் துறை விசாரணையை முடித்து விட்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த குற்றப்பத்திரிகையில் வியப்பூட்டும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இதை வைத்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோசடி செய்த பணத்தில் ஆடம்பரம்
மோசடி செய்த பணத்தில் சுகேஷ் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததும் இல்லாமல் பல நடிகைகளை வளைத்து அவர்களுடன் உல்லாசமாகவும் இருந்துள்ளது தெரியவந்தது. ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் டேட்டிங் சென்ற சுகேஷ் அவருக்கு ரூ 7 கோடி மதிப்பிலான பரிசு பொருட்களை வாங்கிக் கொடுத்துள்ளார். ஜாக்குலினின் மேனேஜருக்கு ரூ 8 லட்சம் மதிப்புள்ள டுகாட்டி பைக்கையும் வாங்கி கொடுத்தது தெரியவந்தது.

நடிகைகளுடன் பழக விரும்பும் சுகேஷ்
நடிகைகளுடன் "பழகுவதை" விரும்பும் சுகேஷ் சந்திரசேகர், வளர்ந்து வரும் நடிகைகள் மாடல்களை வளைத்துள்ளார். இதற்கு அவருடைய உதவியாளர் பிங்கி இரானி உதவி செய்து அதற்குண்டான பணப்பலனையும் அனுபவித்துள்ளார். இப்படி சுகேஷின் வலையில் சிக்கியவர்கள் நோரா பதேஹி, நிகிதா, சோபியா, அருஷா உள்ளிட்டோர் ஆவர். இவர்கள் சுகேஷிடம் இருந்து ஏராளமான பரிசு பொருட்களை பெற்றுள்ளனர்.

பெரிய நடிகைகளுக்கு குறி
இந்த நிலையில் சுகேஷ் பெரிய நடிகைகளுக்கும் குறி வைத்தது தெரியவந்தது. நடிகைகள் சாரா அலிகான், பூமி பெட்னேகர் உள்ளிட்டோரை சந்திக்க விரும்பியுள்ளார். ஆனால் இவர்கள் சுகேஷை சந்திக்க மறுத்துவிட்டனர். அது போல் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை அழைத்துள்ளார். ஆனால் அவர் சுகேஷிடம் சிக்கவில்லை. எனினும் அவர் வாங்கிக் கொடுத்த பரிசு பொருளை மட்டும் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடிகைகளை அழைப்பதையே தொழிலாக கொண்டுள்ளார் சுகேஷ். சிக்காத நடிகைகளுக்காக ரூ 20 கோடி வரை செலவு செய்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications