நடிகர் சுஷாந்த் சிங் மரணம்.. நடிகை ரியாவின் சகோதரர் அதிரடியாக கைது.. பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் அவரது முன்னாள் காதலியான ரியா சக்கரபோர்த்தியின் சகோதரர் ஷோவிக் சக்கரபோர்த்தியின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கியில் பிணமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் முதலில் தற்கொலை என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பீகாரில்ள்ள சுஷாந்தின் தந்தை தன் மகனின் மரணம் குறித்து எழுப்பிய சந்தேகத்தை தொடர்ந்து அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பிகார் அரசு மாற்றியது. இதை பின்னர் உச்ச நீதிமன்றமும் சிபிஐ விசாரிக்கலாம் என உறுதிப்படுத்தியது.

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதகாவும் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்ததையடுத்து அவரின் முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சுஷாந்த் சிங்கிற்கு போதை பழக்கம்

சுஷாந்த் சிங்கிற்கு போதை பழக்கம்

இந்நிலையில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்த போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது அம்பலம் ஆனது. சுஷாந்த் சிங் ராஜ்புத், மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக போதை தரும் மாத்திரியை உபயோகிக்கும் பழக்கம் இருந்தும் அப்போதைய விசாரணையில் தெரிய வந்தது.

ரியாவிடம் நடத்திய விசாரணை

ரியாவிடம் நடத்திய விசாரணை

இது குறித்து என்.சி.பி. எனப்படும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறை பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ரியா மீது போதைப்பொருள் தடுப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி விசாரிக்க தொடங்கினர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரியா சக்ரவர்த்தியிடமும் அவரது தந்தையிடமும் சிபிஐ விசாரணை நடத்தினர்., ரியாவிடம் போதைப்பொருள் தடுப்புத்துறையினர் தனியாக விசாரணை நடத்தினார்கள்.

விசாரணைக்கு பின் கைது

விசாரணைக்கு பின் கைது

அதன்பின்னர் இந்த வழக்கு தொடர்பாக ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோவிக்கிடம் போதைப்பொருள் தடுப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சுஷாந்த் சிங் ராஜ்புத் தங்கியிருந்த வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டாவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். பின்னர் சோஷவிக், சாமுவேல் மிராண்டா ஆகிய இருவரையும் அதிகாரிகள் விசாரணைக்காக அவர்களின் அலுவலகத்துக்கு அழைத்தச் சென்றார்கள் அதன்பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் இன்று 9 மணிக்கு அறிவித்தனர்.

மும்பை திரை உலகில் போதைப்பொருள்

மும்பை திரை உலகில் போதைப்பொருள்

சுஷாந்த் சிங் பயன்படுத்திய போதை மாத்திரைகள் தொடர்பான விவகாரத்தில் ஜைத் விலாத்ரா, அப்தெல் பாசிட் பரிஹார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ததாக கூறப்படும் கைஜான் இப்ராஹிமிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் குழு மும்பை டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.. பாலிவுட் திரைப்பட உலகில் உள்ளவர்கள யார் யாருக்கு மும்பையில் போதைப்பொருள் பயன்படுத்தும் கும்பலுக்கு தொடர்பு உள்ளது மற்றும் அவர்களுக்கு போதைப்பொருள் எப்படி கிடைக்கிறது. அதை யார் விநியோகிக்கிறார்கள் என்பது குறித்து விசாரணையில் தெரியவரலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+