உன் நண்பனுடன் சொர்க்கத்தில் இணைந்துவிட்டாய்!.. சுஷாந்த் சிங்கின் வளர்ப்பு நாய் மரணம்.. தங்கை வேதனை
மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வளர்ப்பு நாய் அவர் இறந்து 3 ஆண்டுகள் கழித்து இறந்துவிட்டது. இந்த சோக சம்பவம் குறித்து அவருடைய சகோதரி உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை பாந்த்ராவில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டு மொத்த திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவரது மரணம் இயற்கையானது இல்லை என அவரது தந்தை போலீஸில் புகார் அளித்திருந்தார். மேலும் நடிகை ரியா சக்கரவர்த்திதான் காரணம் என்றும் அவர்தான் தனது மகனுக்கு ஸ்லோ பாய்சன் விஷத்தை கொடுத்தார் என்றும் புகார் கூறினார்.

ரியா சக்கரவர்த்தி
இதையடுத்து ரியா சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுஷாந்த் சிங் மரணமடைந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவருடைய மரணம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக சுஷாந்த் சிங்கின் உடலை உடற்கூறாய்வு செய்த ரூப் குமார் என்பவர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை என பரபரப்பை கிளப்பினார்.

கொலை
இதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டதாகவும் அவரது கழுத்திலும் உடலிலும் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். சுஷாந்தின் உடலை பார்த்ததுமே அது கொலை என ரூப்குமார் கண்டறிந்ததாகவும் ஆனால் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்த போது அவர்கள் போட்டோ மட்டுமே எடுக்கச் சொன்னதாகவும் கூறியிருந்தார்.

பிரேத பரிசோதனை
பொதுவாக பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஆனால் தன் உயரதிகாரிகள் போட்டோ மட்டும் எடுக்கச் சொன்னார்கள். நானும் அவ்வாறே செய்து பின்னர் சுஷாந்தின் உடலை போலீஸில் ஒப்படைத்துவிட்டேன் என ரூப்குமார் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சுஷாந்த் சிங்கின் வளர்ப்பு நாய்
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் வளர்ப்பு நாய் ஃபட்ஜ் உயிரிழந்துவிட்டதாக சுஷாந்தின் தங்கை பிரியங்கா சிங் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நீண்ட தூரம் சென்றுவிட்டாய்! உன் நண்பருடன் (சுஷாந்த்) சொர்க்க பூமிக்கு சென்றுவிட்டாய்! நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன். அது வரை மிகுந்த மனவேதனையுடன் இருப்பேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரசிகர்களும் சுஷாந்தின் நாய் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications