சிம் கார்டு போல வங்கியை மாற்றலாம்! ரிசர்வ் வங்கியின் விஷன் 2028 சலுகை! வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி
மும்பை: நாம் பயன்படுத்தும் செல்போன் நம்பரை மாற்றாமல் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவது இன்று நமக்கு மிகவும் எளிதான காரியம்.. அதே போன்றதொரு புரட்சிகரமான மாற்றத்தை வங்கி துறையில் கொண்டு வர இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம். இதற்காக 'பேமெண்ட்ஸ் விஷன் 2028' என்ற சிறப்பு ஆவணத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.. இதை பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம்,.
பேமெண்ட்ஸ் விஷன் 2028 என்ற கட்டமைப்பு மூலம் கஸ்டமர்களை தங்கள் வங்கி கணக்கு எண்ணை மாற்றாமலேயே ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு எளிதாக மாற முடியும்..

வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கு
இப்போது ஒரு வாடிக்கையாளர் தனது சேமிப்புக் கணக்கை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்ற விரும்பினால், அதில் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன..
குறிப்பாக அந்த பழைய கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வீட்டுக் கடன் தவணைகள் அதாவது இஎம்ஐ, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் எனப்படும் எஸ்ஐபி, இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் மாத சம்பளம் வரும் விவரம் என அனைத்தையும் புதிய வங்கியில் ஒவ்வொன்றாகப் பதிவு செய்ய வேண்டும்..
இந்த அலைச்சலுக்கும் நேர விரயத்திற்கும் பயந்தே பலரும் தங்களுக்குப் பிடிக்காத அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வங்கி சேவைகளையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.. பல நேரங்களில் அரசுத் திட்டங்களின் பலன்கள் அந்த குறிப்பிட்ட கணக்கில் வருவதால் வேறு வழி தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்..
பேமெண்ட்ஸ் ஸ்விட்சிங் சர்வீஸ்
வாடிக்கையாளர்களின் இந்த தீராத சிரமத்தைப் போக்குவதற்காகத்தான் "பேமெண்ட்ஸ் ஸ்விட்சிங் சர்வீஸ்'"எனப்படும் புதிய தொழில்நுட்பத் தளத்தை ரிசர்வ் வங்கி உருவாக்கி வருகிறது.. இது ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பாகச் செயல்படும்..
இதன் மூலம் நீங்கள் உங்கள் வங்கி கணக்கை மாற்ற முடிவு செய்துவிட்டால், ஒரே கிளிக்கில் பழைய வங்கியில் இருந்த உங்களது அனைத்துப் பணப்பரிவர்த்தனை ஆணைகளும் தானாகவே புதிய வங்கிக்கு மாற்றப்பட்டுவிடும்.. உங்கள் கடன் தவணைகள் மற்றும் முதலீடுகள் எந்தத் தடங்கலும் இல்லாமல் புதிய வங்கியின் மூலம் தானாகவே தொடரும்.. நீங்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நேரில் சென்று விண்ணப்பம் அளிக்க வேண்டிய தேவையே இருக்காது..
லோன் முதல் இன்சூரன்ஸ் வரை
இந்த வசதியின் ஹைலைட்டே உங்கள் வங்கிக் கணக்கு எண் மாறாது என்பதுதான்.. ஆனால் நீங்கள் மாறும் புதிய வங்கியின் ஐஎப்எஸ்சி குறியீடு மட்டும் மாறும்.. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது வங்கித் துறையில் ஆரோக்கியமான போட்டி உருவாகும்..
கஸ்டமர்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கி மாறலாம் என்ற நிலை இருப்பதால், வங்கிகள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு சிறந்த வட்டி விகிதங்களையும், மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளையும் வழங்க முன்வரும்.. இது வாடிக்கையாளர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்குவதோடு, இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.. அதோடு சர்வதேச அளவில் பணப்பரிமாற்றத்தை எளிதாக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது..!!!












Click it and Unblock the Notifications