எனக்கு ஏதாவது ஆச்சுன்னா.. அதற்கு நானா படேகர்தான் பொறுப்பு!இன்ஸ்டாவில் தனுஸ்ரீ தத்தா பரபரப்பு புகார்
மும்பை: எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு நடிகர் நானா படேகர்தான் பொறுப்பு என நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு படத்தின் பாடல் காட்சியின்போது தன்னுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்த நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தனுஸ்ரீ குற்றம்சாட்டினார்.
மோசமான நடன அசைவுகள் மூலம் நடன கலைஞர் கணேஷ் ஆச்சார்யாவும் தனக்கு பாலியல் துன்புறுத்தலை கொடுத்தார் என புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் குறித்து தொடர்ந்து பல்வேறு புகார்களை கூறியுள்ளார் தத்தா.

நானா படேகர்
இதையடுத்து நானா படேகர், தனுஸ்ரீ தத்தா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இவர் நானா படேகருக்கு எதிராக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு பரபரப்பை எழுப்பியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு காரணம் மீ டூ புகாரில் சிக்கிய நானா படேகர்தான்.

வழக்கறிஞர்கள்
அவருடன் அவரது வழக்கறிஞர்கள், பாலிவுட் மாஃபியா நண்பர்கள் ஆகியோரும் பொறுப்பாவார்கள். பாலிவுட் மாஃபியாக்கள் யாரென்றால் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்திற்கு காரணமானவர்கள்தான் இந்த மாஃபியாக்கள். இந்த மாஃபியாக்கள் அனைவரும் ஒவ்வொரு கிரிமினல் வழக்கறிஞர்களை அமர்த்தியுள்ளார்கள்.

தவிர்த்துவிடுங்கள்
அவர்களுடைய திரைப்படங்களை பார்க்காதீர்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக தவிர்த்துவிடுங்கள். எனக்கு எதிராக பலர் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். என்னை துன்புறுத்தியதால் அவர்களின் வாழ்வு நரகமாகிவிட்டது. சட்டமும் நீதியும் எப்போதும் தோற்காது. ஏனென்றால் நான் இந்த நாட்டு மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். ஜெய்ஹிந்த் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 19 ஆம் தேதி புகார்
இது போல் ஏற்கெனவே ஜூலை 19 ஆம் தேதி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருக்கையில் நான் மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுகிறேன். நான் மோசமாக குறி வைக்கப்படுகிறேன்.யாராவது ஏதாவது செய்யுங்கள். கடந்த ஆண்டு எனது பாலிவுட் பணிகளை நாசமாக்கினர். என் வீட்டு தண்ணீரை மருந்துகள், ஸ்டீராய்டுகள் கலந்து என் உடல்நலனை பாதிக்க வைக்க ஒரு பெண் பணியாளரை திட்டமிட்டு அனுப்பியிருந்தார்கள்.

வீட்டு வேலைக்கு
ஆனால் அந்த பெண்யாரோ சொல்லி என் வீட்டு தண்ணீரில் மருந்துகளை கலந்து வைத்துள்ளார். இதனால் எனது உடல் நலனுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த மே மாதம் நான் உஜ்ஜைனிக்கு தப்பி சென்றேன். அப்போது இரு முறை எனது வாகனம் சேதப்படுத்தப்பட்டு விபத்துக்குள்ளானது. கடவுள் புண்ணியத்தில் மரணத்திலிருந்து தப்பினேன். பின்னர் 40 நாட்கள் கழித்து எனது பணிகளை கவனிக்க மீண்டும் மும்பைக்கே வந்துவிட்டேன். இதற்கெல்லாம் அஞ்சி நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என தெரிவித்திருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications