பொண்டாட்டி கொடுமை தாங்க முடியல சார்.. ஆண்களுக்காக யாராவது பேசுங்க! தூக்கில் தொங்கிய டிசிஎஸ் மேனேஜர்!
மும்பை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த சம்பவத்தைப் போலவே மும்பையில் மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் டிசிஎஸ் நிறுவன மேலாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே இருக்கும் சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு பாதுகாப்பு தருபவை போலவே இருக்கிறது. ஆனால் வீட்டில் பல ஆண்கள் பெண்களால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். மேலும், மனைவிகளால் கொடுமைக்கு உள்ளாகும் ஆண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

அப்படி ஒரு சம்பவம் தான் கடந்த டிசம்பர் மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. அதுல் சுபாஷ் என்ற ஏ.ஐ பொறியாளர் தனது மனைவி மன உளைச்சல் ஏற்படுத்தியதாலும் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து மிரட்டியதாலும் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டார்.
மேலும், தற்கொலைக்கு முன்பாக தனது மனைவி குறித்தும், மாமியார் குறித்தும் வீடியோ வெளியிட்டதோடு கடிதமும் எழுதி இருந்தார். இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஆண்களுக்கு ஏற்படும் வீட்டு வன்முறை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் மனைவியின் சித்திரவதை தாங்க முடியாமல் மும்பையைச் சேர்ந்த பிரபல ஐடி நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை முன்னாள் அதிகாரி நரேந்திர சர்மாவின் மகன் மானவ் ஷர்மா. 25 வயதான அவர் மும்பையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். அவருக்கும் நிகிதா சர்மா என்பவருக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியை அழைத்துக்கொண்டு மும்பைக்கு சென்றார் மானவ் ஷர்மா.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி வீட்டில் தூக்கு போட்டு மானவ் சர்மா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அவரது செல்போனில் வீடியோ ஒன்று இருந்தது. மொத்தம் 6 நிமிடங்கள் 57 நொடிகள் இருந்த அந்த வீடியோவில்," என்னைப் பெற்ற தாய் தந்தை மன்னித்து விடுங்கள். எனக்கு வேற வழி தெரியவில்லை. மனைவியின் சித்திரவதை தாங்காமல் ஆண்கள் பலர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆண்களைப் பற்றியும் அவர்கள் கஷ்டங்கள் பற்றியும் பேச யாராவது முன்வர வேண்டும். என் மனைவியின் கொடுமை தாங்க முடியாது என்பதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி மனைவி விவாகரத்து கேட்கிறார். மேலும் ஏற்கனவே அவருக்கு பழக்கமான காதலனுடன் வாழ விருப்பமாக இருக்கிறார்" என கூறியிருந்தார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பெங்களூருவை சேர்ந்த இளைஞர் மனைவியின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மும்பையிலும் அதே போன்று ஒரு தற்கொலை சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார் மாணவர் சர்மாவின் மனைவியான நிகிதா சர்மா. " திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண்டுக்குள்ளேயே என் கடந்த கால வாழ்க்கையை குறிப்பிட்டு என்னை அவதூறாக பேசினார். என்னை அடித்து துன்புத்தியதோடு, தன்னைத் தானே காயப்படுத்தி கொண்டார். நானே அவரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். அவரது பெற்றோர்களிடம் சொன்னபோதும் அவர்கள் அது உங்கள் பிரச்சனை என என்னை ஒதுக்கி வைத்தனர்: என விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், மனைவியின் கொடுமையால் தான் தனது மகன் தற்கொலை செய்து கொண்டார் என அவரது தந்தை ஆக்ரா சதக் காவல் துறையில் புகார் அளித்துள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications